விருது விழாவில் ஐஸ்வர்யா ராய் மகள் செய்த காரியம்.. வளர்ப்பு அப்படி.. அதிர்ச்சியடைந்த பிரபலங்கள்..!

தமிழில் முதன்முதலாக இருவர் என்கிற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் மூலமாக பாலிவுட்டில் பெரிய நடிகையாக மாறியவர் நடிகை ஐஸ்வர்யாராய். இயக்குனர் மணிரத்தினம்தான் ஐஸ்வர்யாராயை முதன் முதலாக சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்.

அதனால் தான் இப்பொழுது வரை ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் திரைப்படங்களில் மட்டும் வந்து நடித்துக் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்.

திருமணத்திற்கு பிறகு நடிக்கவே மாட்டேன் என்று முடிவு எடுத்திருந்த ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததற்கும் அதுதான் காரணம்.

ஐஸ்வர்யா ராய் மகள்:

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயின் மகளான ஆராத்யா பாலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆவார். ஏனெனில் வளர வளர அவர் பார்ப்பதற்கு கதாநாயகி போலவே இருந்து வருகிறார். ஆனால் ஐஸ்வர்யா ராயின் குடும்பத்தினர் அவரை சினிமாவில் நடிக்க வைப்பார்களா என்பது சந்தேகம்தான்.

aishwayra rai

Social Media Bar

இந்த நிலையில் ஒரு விருது வழங்கும் விழாவிற்கு ஐஸ்வர்யாராயுடன் ஆராத்யாவும் வந்திருந்தார். அப்பொழுது அங்கு சிவராஜ்குமார் வந்திருந்தார் அவர் ஐஸ்வர்யாராயை சந்தித்து விட்டு அவரது மகளை சந்திக்க சென்றார் அப்பொழுது அவரது மகள் வேகமாக சென்று சிவராஜ்குமார் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று விட்டு வணக்கம் கூறி இருக்கிறார்.

இதனை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். ஏனெனில் இவ்வளவு பெரிய குடும்பத்தை சேர்ந்தவராக ஆராத்யா. இருந்தாலும் கூட அனைவரிடமும் பணிவாக நடக்க வேண்டும் என்று கூறி ஐஸ்வர்யா ராய் அவரை வளர்ப்பதாக கூறப்படுகிறது. இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது.