dmk tvk

திமுக கொடியை தூக்கிட்டு த.வெ.க கொடியை ஏற்று.. திமுக கவுன்சிலர் வீட்டில் நடந்த சம்பவம்.. வைரலான வீடியோ..!

Tamil Cinema News

நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது தமிழ் சினிமாவில் ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. முதன்முதலாக நடிகர்களும் அரசியலுக்கு வந்து சாதிக்க முடியும் என்பதை நடிகர் எம்.ஜி.ஆர் மக்களுக்கு நிரூபித்து காட்டினார்.

அதனை தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் பிறகு அரசியலுக்கு வந்தனர் ஆனால் அனைவராலும் எம்.ஜி.ஆரின் இடத்தை பிடிக்க முடியவில்லை ஏனெனில் எம்.ஜி.ஆர் ஒரு கமர்சியல் கதாநாயகனாக ஏற்கனவே மக்கள் மத்தியில் பெரிய இடத்தை பிடித்திருந்தார்.

அதனால் மக்கள் மத்தியில் இடம் பிடிக்க முடிந்தது. ஆனால் மற்ற நடிகர்களை பொருத்தவரை அந்த அளவிற்கு அவர்களுக்கு சினிமாவில் செல்வாக்கு இருக்கவில்லை. இப்பொழுது அதேபோல சினிமாவில் செல்வாக்கு கொண்ட ஒரு நடிகராக அரசியலுக்கு வந்திருப்பவர் நடிகர் விஜய்.

vijay tvk
vijay tvk

தளபதி ரசிகர் செஞ்ச வேலை:

கமல்ஹாசனுக்கு பிறகு வேறு எந்த நடிகரும் அவ்வளவு செல்வாக்குடன் அரசியலுக்கு வரவில்லை. இந்த நிலையில் விஜய் மக்கள் மத்தியில் வெற்றி பெறுவாரா என்பது ஒரு கேள்வியாக இருந்து வருகிறது.

தொடர்ந்து பல கட்சியை சேர்ந்தவர்களும் கூட விஜயின் அரசியல் நகர்வு குறித்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று அதிக வைரலாக துவங்கியுள்ளது. இந்த வீடியோவில் திமுக கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் அவரது காரில் திமுக கொடியை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக தளபதி விஜயின் த.வெ.க கொடியை மாற்றி வைக்கிறார்.

அதேபோல காரில் உள்ளே முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் இருக்கிறது அதையும் எடுத்துவிட்டு விஜயின் புகைப்படத்தை வைக்கிறார் இது ஒரு கவுன்சிலரின் மகன் வெளியிட்ட வீடியோ என்று கூறப்படுகிறது இந்த வீடியோ குறித்து பெரிதாக தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்றாலும் கூட இந்த வீடியோ இப்பொழுது ட்ரண்டாக துவங்கி இருக்கிறது.