தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலங்களின் இறப்புகள் என்பது மக்கள் மத்தியில் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. நேற்று முந்தைய தினம் பத்ரி மாதிரியான திரைப்படங்களில் நடித்த கராத்தே மாஸ்டர் ஆன ஹுசைனி இறந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பே பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இறந்து இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ஹுசைனி முன்பு கல்லூரி கால அனுபவம் ஒன்றை பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.
அது இப்பொழுது ட்ரெண்டாகி வருகிறது. ஹுசைனி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் அந்த கல்லூரியில் அவருக்கு ஜூனியர் ஆக விவேக் படித்துக் கொண்டிருந்தார்.
விவேக்குக்கு கல்லூரி காலகட்டங்களில் இருந்தே நடிப்பதன் மீது தான் ஆர்வம் அதிகம். அதனால் நிறைய மேடை நாடகங்களை செய்து வந்தார் விவேக். இந்த நிலையில் உசைனி அப்பொழுதே கராத்தே மீது அதிக ஆர்வத்தில் இருந்து வந்தார்.
இதனால் பெரிய பெரிய கற்களை உடைப்பது போன்ற விஷயங்களை அவர் செய்து வந்தார். இதனை கலாய்க்கும் விதமாக விவேக் மேடை நாடகம் ஒன்ற நடத்தினார். அதில் அப்பளத்தை அடுக்கி வைத்து உடைப்பது போன்ற விஷயங்களை செய்து வந்தார்.
இதனால் கடுப்பான ஹுசேனி அவருடைய ஆட்களுடன் சென்று விவேக்கை கடத்தி அடிப்பதற்காக சென்று இருக்கிறார். அப்பொழுது மறைத்த ஆசிரியர்கள் விவேக்கை காப்பாற்றியுள்ளனர். விவேக்கும் இனி அப்படி செய்ய மாட்டேன் என்று ஹுசைனிடம் கூறியிருக்கிறார்.
அதன் பிறகு இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆகிவிட்டனர் இந்த விஷயத்தை அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் ஹுசைனி.