என் வீட்டை இடிச்சி தர மட்டமாக்குன ஆர்யா.. முதன் முறையாக உண்மையை கூறிய சந்தானம்..!
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சந்தானம். சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே காமெடி படங்களாக இருப்பதால் தொடர்ந்து அவரது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு என்பது கிடைத்து வருகிறது.
அதிலும் அவர் நடிக்கும் பேய் படங்கள் இன்னமுமே அதிக வரவேற்பை பெற்றவையாக இருக்கின்றன. அந்த வகையில் தற்சமயம் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்.
இந்த திரைப்படத்தின் கதைப்படி சந்தானம் பட விமர்சகராக இருக்கிறார். இவர் மீது கோபம் கொண்ட இயக்குனர் பேய் ஒன்று அவரை திரைப்படத்திற்குள் அனுப்புகிறது. அந்த திரைப்படமே ஒரு பேய் திரைப்படமாகும். இந்த நிலையில் சந்தானம் எப்படி தப்பிக்க போகிறார் என்பது கதையாக இருக்கிறது.
இந்த திரைப்படத்தை நடிகர் ஆர்யாதான் தயாரித்துள்ளார். ஆர்யா சந்தானம் இருவருமே நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இதுக்குறித்து சந்தானம் சமீபத்தில் பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது நானும் ஆர்யாவும் ரொம்ப நெருக்கமான நண்பர்கள்.
எந்த அளவிற்கு என்றால் சமீபத்தில் நான் இடத்துடன் சேர்த்து ஒரு வீட்டை வாங்கினேன். அந்த வீட்டை புதுமைப்படுத்தி குடி புகலாம் என இருந்தேன். ஆனால் அந்த வீட்டை பார்த்த ஆர்யா நன்றாக இல்லை என்று இடிக்க சொல்லிவிட்டான்.
அவனது நண்பருக்கு போன் செய்து அந்த வீட்டை 3 நாட்களில் இடித்துவிட்டான். வாரா வாரம் வெள்ளி கிழமை என் அம்மா அந்த வீட்டிற்கு விளக்கு போட வருவார். அவர் வந்து பார்த்துவிட்டு வீட்டை காணவில்லை என எனக்கு போன் செய்தார்.
ஆர்யா சொன்னதால் இடித்துவிட்டேன் என கூறினேன். உடனே அவர் அதிர்ச்சியாகிவிட்டார் என அந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார் சந்தானம்.