இப்போது வெளியான பைசன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார் நடிகை அனுபாமா பரமேஸ்வரன்.
அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் பிரேமம் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர். அதற்கு பிறகு அவருக்கு தமிழ் தெலுங்கு மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் வாய்ப்புகள் அதிகமாக வந்தது.
தமிழில் தனுஷ் நடித்த கொடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் அனுபமா. ஆனாலும் கூட அதற்கு பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் என்பது தமிழில் இல்லாமல் இருந்து வந்தது.
ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே வாய்ப்புகள் கிடைத்து வந்தது இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் அனுபமா.
அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் Z5 ஓடிடியில் வெளியாக இருக்கும் தெலுங்கு திரைப்படமான கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் அனுபாமா.
பேய்கள் வாழும் ஒரு பங்களாவிற்குள் சென்று மாட்டிக்கொள்ளும் குழு எப்படி அங்கிருந்து தப்பிக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கிறது தற்சமயம் இதன் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.







