Gold Price Update: சமீப காலமாகவே தங்கத்தின் விலை என்பது மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. பொதுவாக தங்கத்தின் விலை எப்பொழுதுமே உயர்ந்து கொண்டுதான் இருக்கும் என்றாலும் கூட விலைவாசி உயர்வு என்பது மிகக் குறைவாக தான் நடந்து கொண்டிருக்கும்.
ஒரு வாரத்தில் பத்து ரூபாய் அல்லது 15 ரூபாய் என்பதாக தான் உயர்வு இருந்து கொண்டிருக்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக அப்படி இல்லாமல் பல நூறுகளில் தங்கத்தின் விலை ஒரு வாரத்தில் அதிகரிப்பதை பார்க்க முடிகிறது.
இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது என்னவெனில் அமெரிக்க டாலர்களிலேயே தங்கத்தின் விலை இப்பொழுது உயர துவங்கி இருக்கிறது. இதற்கு முன்பு இந்திய ரூபாயின் மதிப்பு டாலரின் மதிப்பை விட குறைவாகவே இருந்ததாலேயே தங்கத்தின் விலை அதிகரித்தது.
ஆனால் இப்பொழுது தங்கத்தின் விலை டாலர்களிலேயே அதிகரிப்பதால் ரூபாயில் அதன் மதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் பிரபல பொருளாதார நிபுணரான ஜே பி மோர்கன் இதுகுறித்து பேசும்பொழுது சில அதிர்ச்சி தகவல்களை கொடுத்திருக்கிறார்.
அதில் அவர் கூறும் பொழுது தங்கத்தின் விலை இன்னமுமே அதிகரிக்கும் இப்பொழுது சற்று தங்கத்தின் விலை குறைந்தாலும் கூட போக போக இதன் அதிகரிப்பு இன்னும் நாம் யோசிக்காத அளவில் இருக்கும். 2028 ஆம் ஆண்டுகளில் கண்டிப்பாக ஒரு சவரன் தங்கத்தின் மதிப்பு 2 லட்ச ரூபாய் இருக்கும் என்பது அவரது கணிப்பாக இருக்கிறது.










