Dr Stone Anime: அரசியல் ரீதியாகவே ஜப்பானுக்கு அமெரிக்கா மீது ஒரு எதிர்ப்பு மனநிலை உண்டு. இந்த நிலையில் அதை வெளிப்படுத்தும் வகையில் தொடர்ந்து தனது அனிமேக்களில் அமெரிக்க எதிர்ப்பு விஷயங்களை ஜப்பான் புகுத்தி வருகிறது.
அந்த வகையில் டாக்டர் ஸ்டோன் என்கிற அனிமே தொடரிலும் ஒரு சம்பவத்தை நிகழ்த்தி இருக்கின்றனர். டாக்டர் ஸ்டோன் அனிமே தொடரின் கதையை பொறுத்தவரை திடீரென வீசும் ஒரு கதிர்வீச்சால் மொத்த மனித இனமும் கல்லாகி விடுகிறது.
அதற்கு பிறகு 3000 வருடங்கள் கழித்து சென்கு என்கிற கதாநாயகன் மட்டும் கண் விழிக்கிறான். அவன் சிலையில் இருந்து மனிதனானது எப்படி என அவனுக்கே தெரியவில்லை. அதனை தொடர்ந்து இதுக்குறித்து அவன் ஆய்வு செய்கிறான்.
இதற்கு நடுவே மனித நாகரிகத்தை வளர்க்கும் கண்டுப்பிடிப்புகளை ஒவ்வொன்றாக உருவாக்குகிறான் சென்கு. இந்த நிலையில் அமெரிக்காவில் நாசாவை சேர்ந்த டாக்டர் சீனோ என்கிற விஞ்ஞானியும் கூட இதே மாதிரி சிலையில் இருந்து மனிதனாக மாறுகிறார்.
ஒருப்பக்கம் சென்கு கண்டுப்பிடிப்புகள் மூலம் மனித இனத்துக்கு உதவும் ஆக்கப்பூர்வமான விஷயங்களை கண்டுப்பிடித்து கொண்டுள்ளான். ஆனால் சீனோ தொடர்ந்து வெடி குண்டு, துப்பாக்கி போன்றவற்றை கண்டுப்பிடிக்கிறான்.
இரண்டாம் உலக போரில் ஆயுத உற்பத்தியில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது. எனவே அமெரிக்காவை அந்த வகையில் விமர்சிக்கும் வகையிலேயே இப்படியான விஷயம் இந்த அனிமேவில் இடம் பெற்றுள்ளது.








