தமிழ் சினிமாவில் என்னதான் பெரிய நடிகர்கள் என்றாலும் கூட அதே சமயம் நிறைய வீழ்ச்சிகளை கண்ட ஒரு நடிகராகவும் நடிகர் விஜய் இருந்து வருகிறார்.
சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே நடிகர் விஜய்யை பெரிதாக எந்த ஒரு ரசிகர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர் மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு நிறைய காலம் தேவைப்பட்டது.
அதேபோல அடிக்கடி தொடர்ந்து விஜய்யின் படங்கள் தோல்வி படங்களாக அமையும் போது எல்லாம் அவருக்கு ஒரு வீழ்ச்சி உண்டாகும். அதற்குப் பிறகு மீண்டும் வெற்றி படங்களை கொடுத்து விஜய் தனக்கான இடத்தை பிடிப்பது உண்டு.
அப்படியாக விஜய்க்கு தோல்வியை கொடுத்த திரைப்படங்களில் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான புலி திரைப்படமும் ஒன்றாகும். இந்த படம் குறித்து படத்தில் வேலை செய்த கேமராமேன் நடராஜன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

பட தோல்விக்கு காரணம்:
அதில் அவர் கூறும் பொழுது புலி திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் படத்தின் பட்ஜெட் அதிகமானால் அதில் சில மாற்றங்களை ஏற்படுத்தினார். அதுதான் இந்த படம் தோல்வி அடைவதற்கு காரணமாக இருந்தது.
ஏனெனில் இந்த படம் துவங்கும் பொழுது விஜய் என்னிடம் கூறும்பொழுது 18இல் இருந்து 35 வயதுக்கு உட்பட்ட ரசிகர்களுக்கு நான் நிறைய திரைப்படங்களை செய்து விட்டேன். ஆனால் 8 லிருந்து 18 வயதுக்குள் இருக்கும் சிறுவர்களுக்கு எந்த படமும் பண்ணவில்லை.
அப்படி ஒரு படமாக இது இருக்கும் என்பதால் தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறினார். எனவே இது ஒரு குழந்தைகளுக்கான படமாகவே முழுக்க முழுக்க உருவாகி இருந்தால் இந்த படம் வெற்றி அடைந்திருக்கும் என்று கூறி இருக்கிறார் நடராஜன்.
 
			 
			








