ரஜினி படமா இருந்தாலும் சம்பளம் அதிகம் தந்தாதான் மியுசிக் போடுவேன் – சர்ச்சையை கிளப்பிய அனிரூத்

தற்சமயம் பிரபலமான இசையமைப்பாளர்களில் முக்கியமானவராக இயக்குனர் அனிரூத் இருக்கிறார். அனிரூத் இசையமைத்தாளே அந்த பாடல் ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது.

Social Media Bar

இந்நிலையில் லைக்கா நிறுவனம் தற்சமயம் தயாரிக்க இருக்கும் இரு படங்களுக்கு அனிரூத்தை இசையமைக்க அழைக்கலாம் என திட்டமிட்டிருந்ததாம். அதில் ஒரு படம் லால் சலாம் திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுக்குறித்து லைக்கா நிறுவனம் அனிரூத்திடம் பேசிய பொழுது தற்சமயம் வாங்கும் சம்பளத்தை விடவும் அதிக சம்பளம் கேட்டாராம் அனிரூத்.

அந்த சம்பளம் தங்களுக்கு கட்டுப்படி ஆகாது என முடிவு செய்த லைக்கா நிறுவனம், அந்த இரு படங்களுக்கும் இசையமைப்பதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானிடம் பேசி வருகிறதாம்.

இதனால் லால் சலாம் திரைப்படத்திற்கு அதிகப்பட்சம்  ஏ.ஆர் ரகுமானே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.