தமிழில் இசையமைப்பாளராகவும் கதாநாயகனாகவும் இருந்து வருகிறார் நடிகர் ஹிப் ஹாப் ஆதி. பல வருடங்களாகவே இசை மூலமாக பாடல்களை போட்டு வந்த ஹிப் ஹாப் ஆதிக்கு சுந்தர் சி மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வாய்ப்புகள் கிடைத்தது.
பிறகு சுந்தர் சி தயாரிப்பிலேயே மீசைய முறுக்கு என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் ஹிப் ஹாப் ஆதி.
இப்பொழுது அவர் நடிக்கும் திரைப்படங்கள் எதுவும் அவ்வளவாக பெரிய வரவேற்பு பெறுவது கிடையாது. இந்த நிலையில் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து அவர் மீது இருக்கும் சர்ச்சை என்னவென்றால் க்ளப்புள மப்பிள என்கிற ஒரு பாடலை அவர் உருவாக்கியிருந்தார்.
ஹிப் ஹாப் ஆதி சொன்ன விஷயம்:
அந்த பாடலில் க்ளப்புக்கு செல்லும் பெண்களை தவறாக சித்தரிக்கும் வகையில் பாடல் வரிகள் அமைந்து இருந்தன. அது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ஆதி கூறும் பொழுது நான் கோயம்புத்தூரில் சின்ன ஊரில் இருந்து சென்னைக்கு வந்தவன்.
அப்படி வரும்பொழுது இந்த மாதிரியான பழக்க வழக்கங்கள் எனக்கு தவறானதாக தோன்றியது. அதனால்தான் அப்படியான ஒரு பாடலை போட்டேன். ஆனால் சென்னையிலேயே தங்கி வாழ துவங்கிய பிறகு இது சாதாரணமான விஷயம் தான்.
அவர்களது வாழ்க்கை அவர்களது இஷ்டம் என்பது புரிந்தது. எனவே அந்த பாடலை போட்டது தவறு என்பதை குறிக்கும் விதமாக சிவகாமியின் சபதம் என்கிற ஒரு திரைப்படத்தில் நேரடியாகவே நான் பேசியிருந்தேன். அதேபோல அந்த பாடலை போட்டதற்காக பகிரங்கமாக நான் மன்னிப்பும் கேட்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.








