kakashi itachi naruto

Naruto இட்டாச்சுக்கும் கக்காஷிக்கும் உள்ள நட்பு… சலார் மாதிரி ஒரு நட்பு.!

Anime Special Articles

Naruto Itachi: நருட்டோ கதையில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் கக்காஷி ஹாட்டாகே மிக முக்கியமான கதாபாத்திரமாகும். கக்காஷி ஹட்டாக்கேவை பொறுத்தவரை இவரை பலரும் காபி நிஞ்சா என்றே அழைக்கின்றனர்.

ஏனெனில் அவனிடம் இருக்கும் ஷாரிங்கான் சக்தியை கொண்டு எந்த ஒரு ஜுட்ஸுவையும் கக்காஷியால் காபி செய்து அப்படியே செய்ய முடியும். அதையும் தாண்டி கக்காஷி மதிப்பு வாய்ந்த கதாபாத்திரமாக பார்க்கப்படுவதற்கு முக்கிய காரணம் அவரின் தன்னம்பிக்கை.

கக்காஷியிடம் எந்த ஒரு பெரிய சக்தியும் இல்லாவிட்டாலும் கூட நெஞ்சூரம் கொண்ட மனிதர். க்ரேட் நிஞ்சா வார் நடக்கும்போது மதரா உச்சிஹாவை எதிர்ப்பதற்கான சூழல் வரும்போது அவன் தன்னை விட வலிமையான எதிரி என தெரிந்தும் பயமின்றி எதிர்த்து நிற்பார் கக்காஷி

கக்காஷிக்கும் இட்டாச்சு உச்சிஹாவுக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உண்டு. அக்காட்சுகேவில் சேர்ந்த பிறகு இட்டாச்சு எதிரியாக மாறியிருக்கலாம். ஆனால் சிறுவயதில் இவர்கள் இருவருமே ஆம்பு ப்ளாக் காப்ஸில் ஒன்றாக பணிப்புரிந்திருப்பர்.

naruto kakashi
naruto kakashi

மிகவும் திறன் வாய்ந்த ஷினோபியை மட்டுமே ஆம்பு ப்ளாக் ஆப்ஸில் சேர்த்துக்கொள்வார்கள். இட்டாச்சு அளவுக்கு சக்தி இல்லாவிட்டாலும் அவனளவிற்கு சக்தி வாய்ந்தவராக கக்காஷி இருப்பார். அதே போல இவர்கள் இருவரும் இணைந்து பல விஷயங்களை செய்திருப்பார்கள்.

கக்காஷி கடந்த கால வாழ்க்கை இருளாக இருந்ததால் அவர் ஆம்பு ப்ளாக் ஆப்ஸில் இருக்கும்போது இரக்கமற்றவராக இருப்பார். அது இட்டாச்சியையே கொஞ்சம் பயப்பட வைக்கும் என்றுதான் கூற வேண்டும். ஆனால் ஒருவேளை கக்காஷி மனம் மாறாமல் ஒரு கெட்ட குணத்துடனே இருந்திருந்தால் அவர் இட்டாச்சியை விட பெரிய வில்லனாகி இருக்கவும் வாய்ப்புண்டு.

அதையெல்லாம் தாண்டி இவர்களுக்குள் ஒரு சகோதரர்களுக்கு இடையே இருக்கும் பாசம் இருக்கும். அதனால்தான் நருட்டோவை கடத்த வரும் இட்டாச்சி கக்காஷியை பார்த்ததும் தனது ஜுட்ஸுவை பயன்படுத்தி அவரை குழப்பமடைய செய்துவிடுவார். ஆனால் கொல்ல மாட்டார். இப்படியாக ஒரு நட்பு இவர்கள் இருவருக்கும் இருந்துள்ளது.