பத்து தல – படத்தின் முக்கியமான அப்டேட் இன்று!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு நடித்து வரும் திரைப்படம் பத்து தல. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

Social Media Bar

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் வருவது போலவே இதிலும் தாடியெல்லாம் வைத்துக்கொண்டு காட்சி தருகிறார் சிம்பு.  இந்த படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வந்த நிலையில் தற்சமயம் படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 05.04க்கு படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தின் சிங்கிளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.