Connect with us

நீங்க நடிக்கிறதா இருந்தா படத்தை எடுக்கிறேன்! – பெண் நட்சத்திரத்திற்காக படத்தையே நிராகரித்த கலைஞர்!

Cinema History

நீங்க நடிக்கிறதா இருந்தா படத்தை எடுக்கிறேன்! – பெண் நட்சத்திரத்திற்காக படத்தையே நிராகரித்த கலைஞர்!

cinepettai.com cinepettai.com

எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டங்களில் இப்போது போல் இல்லாமல் நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சில கதாபாத்திரத்திற்கு இந்த நடிகர் அல்லது நடிகை நடித்தால்தான் நன்றாக இருக்கும் என முடிவெடுத்து திரைக்கதையை எழுதுவதுண்டு.

அப்படி பல படங்களுக்கு அப்போது கதை எழுதியதுண்டு. அப்போது சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய கதையாசிரியர்களில் கலைஞர் மு. கருணாநிதி முக்கியமானவர். அவர் கதை எழுதும் கதைகள் எல்லாமே நல்ல ஹிட் கொடுக்கும்.

இதனால் கலைஞர் கதைக்கு நல்ல கிராக்கி இருந்து வந்தது. அப்போதுதான் சிலப்பதிகாரம் கதையை பூம்புகார் என்னும் பெயரில் திரைப்படமாக்குவதற்கான திட்டம் உருவானது. எஸ்.எஸ். ராஜேந்திரன் கோவலனாகவும், சி.ஆர் ராஜகுமாரி கண்ணகியாகவும் நடிக்க இருந்தனர்.

அதில் கவுதி அடிகள் என்கிற கதாபாத்திரம் ஒன்று வரும். அந்த கதாபாத்திரத்தை எழுதும்போதே கலைஞர் அந்த கதாபாத்திரத்திற்கு கே.பி சுந்தராம்பாள்தான் சரியாக இருப்பார் என முடிவு செய்துவிட்டார். இதுக்குறித்து கேபி சுந்தராம்பாளிடம் கேட்கும்போது அவர் நடிப்பதற்கு மறுத்துவிட்டார்.

ஆனால் கே.பி சுந்தராம்பாளை தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துவிட முடியாது என நினைத்தார் கலைஞர். எனவே கே.பி சுந்தராம்பாள் இல்லை எனில் இந்த படத்தையே எடுக்க வேண்டாம் என கூறிவிட்டார். இதை கேட்ட கே.பி சுந்தராம்பாள் பின்பு சமாதானமாகி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

To Top