மோகன்லாலை விட நான் சிறப்பா செஞ்சேன்! –  பாபநாசம் குறித்து கூறிய கமல்!

வேற்று மொழி திரைப்படங்கள் பலவும் தமிழில் ரிமேக் ஆவதுண்டு. அதே போல தமிழ் திரைப்படங்கள் பலவும் வேற்று மொழிக்கு ரிமேக் ஆகின்றன. ஆனால் ஒரு படம் அதன் ஒரிஜினலை விட ரிமேக் வெர்சன் சிறப்பாக இருப்பதை பார்த்ததுண்டா!

Social Media Bar

அப்படி ஒரு சிறப்பான திரைப்படமாக அமைந்த திரைப்படம் பாபநாசம். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷியம் என்கிற திரைப்படத்தின் ரிமேக்தான் பாபநாசம். இந்த படத்தில் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தில் தனது மகள் ஒரு கொலையை செய்துவிடவே அதை சரி செய்ய முயலும் தந்தை கதைதான் இவை இரண்டுமே.

ஏன் பாபநாசம் த்ரிஷியமை விட சிறப்பாக உள்ளது என்கிற கேள்விக்கு ஒரு கேள்வியில் பதில் அளித்துள்ளார் கமல். அதாவது த்ரிஷியமில் வரும் ஜார்ஜ் குட்டி கதாபாத்திரமும் க்ளைமேக்ஸில் தெரியாமல் உங்கள் மகனை கொன்று விட்டேன் என போலீஸ் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்கும் காட்சி ஒன்று இருக்கும்.

ஆனால் அதே சமயம் ஜார்ஜ் குட்டி தான் செய்த குற்றத்திற்காக பெரிதாக வருத்தப்படமாட்டார். ஆனால் பாபநாசத்தில் வரும் சுயம்புலிங்கம் மிகவும் சாதரணமான ஒரு ஆள். அவரது வாழ்க்கையில் தெரியாமல் ஒரு கொலை நடக்கிறது. அவர் அதை மறைக்க முயன்றாலும் கூட தனது தவறை குறித்து வருத்தப்படுகிறார்.

அதனால்தான் இறுதி காட்சிகளில் சுயம்புலிங்கம் அழுதுக்கொண்டே பேசுகிறார். இந்த வித்தியாசமே பாபநாசத்தை தனித்துவமாக காட்டுகிறது என விளக்குகிறார் கமல்.