தமிழில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படம் மூலமாக திரைத்துறைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்தே. பல கதாநாயகிகள் வெளி சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமடைந்துள்ளனர்.

ஆனால் பூஜா ஹெக்தே மட்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியும் பிறகு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமாவிற்கு சென்று பிரபலமானார். ஆனால் தற்சமயம் தமிழ் சினிமாவிலும் கூட பூஜா ஹெக்தேவிற்கு பெரும் ரசிக வட்டாரம் உருவாகியுள்ளது.

அவர் நடிப்பில் வெளியான டி.ஜே, அல வைகுந்தபுரம் போன்ற படங்கள் மூலம் ஏற்கனவே பலரும் பூஜா ஹெக்தேவிற்கு ரசிகனாக இருந்தனர். தற்சமயம் பீஸ்ட் திரைப்படம் மூலமாக தமிழுக்கு மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார் பூஜா ஹெக்தே.

தற்சமயம் பாலிவுட் வரை சென்று தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் பூஜா ஹெக்தே. இந்த நிலையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் மினுக்கும் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன.
