முதல் படம் பண்றப்பவே பயங்கரமா பீட்டர் விடுவாரு! –வெற்றி மாறனை கலாய்த்த ஜிவி பிரகாஷ்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். இதுவரை வெற்றிமாறன் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே தமிழ் சினிமாவில் பெரும் ஹிட் கொடுத்த திரைப்படங்களாகும். வெற்றிமாறன் இயக்கிய படங்களில் முக்கால்வாசி திரைப்படங்களில் நடிகர் தனுஷ் தான் படத்தின் கதாநாயகனாக நடித்திருப்பார்.

Social Media Bar

அதைப்போல வெற்றிமாறனின் முதல் திரைப்படமான ஆடுகளத்தில் துவங்கி அதிக திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். ஜிவி பிரகாஷ் ஒரு பேட்டியில் முதன் முதலாக வெற்றிமாறனோடு நடந்த சந்திப்பை பற்றி கூறியுள்ளார்.

வெற்றிமாறன் சினிமாவில் துணை இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது ஜிவி பிரகாஷ் ஏற்கனவே இரண்டு படங்களுக்கு இசையமைத்திருந்தார். அப்போதுதான் ஆடுகளத்திற்கான திரை கதையை எழுதி வந்தார் வெற்றிமாறன். 

அந்த சமயத்தில் ஜிவி பிரகாஷை தொடர்பு கொண்ட வெற்றிமாறன் ஆடுகளம் என்கிற ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறேன். அதற்கு நீங்கள் தான் இசையமைக்க வேண்டும் என முழு ஆங்கிலத்திலேயே ஜிவி பிரகாசிடம் பேசியுள்ளார். 

சரி பெரும் இயக்குனர் போல இப்படித்தான் இவர் ஆங்கிலத்தில் பேசுவார் என நினைத்த ஜிவி பிரகாஷ் அந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு ஆடுகளம் திரைப்படம் ஜிவி பிரகாஷ் கூட ஒரு முக்கியமான திரைப்படம் ஆக அமைந்தது இந்த படம் இசைக்காக தேசிய விருது பெற்றது. பிறகு வெற்றிமாறனின் அதிக படங்களுக்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்தான் இசையமைத்தார்.

ஆனாலும் ஆரம்பக்கட்டத்தில் வெற்றிமாறன் பீட்டர் விட்டதை கலாய்த்து இடையில் ஒரு பேட்டியில் பேசி இருந்தார் ஜிவி பிரகாஷ்.