சண்ட செய்யலாமா!.. பிரதீப்பிடம் பிரச்சனை செய்த நிக்‌ஷன்!.. எல்லாம் சோத்து பிரச்சனைதான்!..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களிலேயே மிகவும் பிரபலமான தொடராக இருப்பது பிக் பாஸ். வருடத்திற்கு ஒருமுறை 100 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதாகும்.

இந்த நிலையில் வழக்கமாக பிக் பாஸ் தொடர் துவங்கி ஒரு வாரத்திற்கு பொறுமையாக தான் செல்லும். ஆனால் இந்த முறை துவங்கியது முதலே மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது.

முதல் வாரமே இந்த முறை எலிமினேஷன் ரவுண்டும் நடந்தது. மேலும் பிக் பாஸ் இதற்கு உள்ளே ஸ்மால் பாஸ் ஹவுஸ் என்று இன்னொரு வீட்டையும் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் உணவு பிரச்சனை காரணமாக இன்று நிக்சன் மற்றும் பிரதீப் இடையே பெரும் சண்டை நடந்தது.

போன வாரம் உணவு வாங்குவதில் பிரதீப் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக நிக்ஸன் கேட்க, அதற்கு பிரதீப் உனக்கு அதை எல்லாம் கேட்க தகுதியே இல்லை என்று கூறிவிட்டார்.

அதனால் கடுப்பான நிக்சன் என் தகுதியை பற்றி கூற உனக்கு என்ன உரிமை இருக்கிறது. உன்னை போல எளிதாக நான் இங்கு வரவில்லை. பாட்டு பாடி நடனம் ஆடி சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுதான் இங்கு வந்துள்ளேன் என கூறியுள்ளார். இதனால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பானது.