News
சட்டத்துக்கு விரோதமா ஜெயம் ரவி இதை செஞ்சுட்டார்.. விவாகரத்தில் வகையாக மாட்டிவிட்ட மனைவி..!
கடந்த இரண்டு நாட்களாக ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த வழக்குகள் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இதற்கு முக்கிய காரணமாக ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கை தான் காரணமாக இருக்கிறது.
அதன்படி ஜெயம் ரவி கூறும் பொழுது அவர் அதிகாரப்பூர்வமாகவே ஆர்த்தியை விவாகரத்து செய்வதை அந்த அறிக்கையில் கூறியிருந்தார். மேலும் அதற்கு பல காரணங்களை முன் வைத்திருந்தார் ஜெயம் ரவி.

மேலும் மீடியாக்கள் தொடர்ந்து இதை பெரிதாக வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் மீடியாக்கள் தொடர்ந்து இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என்று செய்திகளை வெளியிட்டு வந்து கொண்டிருந்தன.
ஆர்த்தியின் பதில்:
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆர்த்தி ஒரு நோட்டீசை இன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது விவாகரத்து செய்ய போகும் விஷயத்தை முதலில் தன்னிடம் ஜெயம் ரவி கூறவில்லை.
சமீபகாலமாக அவரை நிறைய முறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன் ஆனால் அதற்கான வாய்ப்புகள் அமையவே இல்லை. அதற்குள்ளாக ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்து இருக்கிறார். இதனால் எனது குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் என்னிடம் வந்துள்ளது என்று கூறியிருக்கிறார் ஆர்த்தி.

இது மட்டுமல்லாமல் மனைவியின் ஒப்புதல் வாங்காமலேயே குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி. ஒரு வக்கீல் நோட்டீஸ் கூட அவர் தனது மனைவிக்கு அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு கோர்ட்டில் வெற்றி பெறாது ஆர்த்தியும் மனசு வைத்தால் மட்டும் தான் ஜெயம் ரவி விவாகரத்து பெற்று செல்ல முடியும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.
