பீட்சா 3 இல் நான் இருக்கேன்! –  தகவல் அளித்த அயலி நடிகை!

ஓ.டி.டி தளங்கள் தற்சமயம் திரைப்படங்களுக்கு இணையான இடத்தை சினிமா ரசிகர்கள் இடையே ஏற்படுத்தியுள்ளது. ஓ.டி.டி தளங்கள் வழியாக கூட தங்களது திறமையை நிரூபிக்கமுடியும் என சாதித்து காட்டியுள்ளனர் சில இயக்குனர்கள்.

Social Media Bar

அப்படியான இயக்குனர்களில் முக்கியமானவர் முத்துக்குமார். ஆர்.முத்துக்குமார் இயக்கிய முதல் வெப் சீரிஸ் அயலி. இந்த வெப் சீரிஸ் கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு அதிர்வலையை ஏற்படுத்தியது. 1980 களில் பெண்கள் ஒடுக்கப்பட்ட நிலையை வெளிக்கொணரும் வகையில் இந்த சீரிஸ் அமைந்தது.

இதில் முக்கியமான கதாபாத்திரமான தமிழ் செல்வி கதாபாத்திரத்தில் நடிகை அபி நக்‌ஷத்ரா நடித்திருந்தார். 17 வயதே ஆகியிருக்கும் நிலையில் அவரது சிறப்பான நடிப்பை கண்டு தமிழ்நாடே வியந்து வருகிறது.

இந்த நிலையில் பிசா படத்தின் அடுத்த படமான பிசா 3 திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகை அபி நக்‌ஷத்ரா நடித்துள்ளார். படத்தின் முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியான நிலையில் அதன் இரண்டாம் சிங்கிள் இன்று 5.00 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார் அபி நக்‌ஷத்ரா.

இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.