Latest News
ஒரே நாளில் 20 லட்ச வீவ்களை கடந்த வாத்தி ட்ரைலர்! – ட்ரைலர்லையே முழு கதையும் வந்துட்டு! ட்ரைலர் ரிவீவ்!
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து தனுஷ் நடித்து வரும் திரைப்படம் வாத்தி. திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் மிகவும் அமைதியான கதாபாத்திரம் என்பதால், வாத்தி படத்தில் சண்டை போடும் கதாபாத்திரமாக தனுஷ் நடித்துள்ளார்.
![](https://cinepettai.com/wp-content/uploads/2023/02/vaathi-1024x569.jpg)
இந்த ட்ரைலர் வெளியாகி ஒரு நாளைக்குள் 20 லட்ச வீவ்களை கடந்து சென்றுள்ளது.
படத்தின் கதை:
படத்தில் பார்க்கும்போது தனுஷே ஒரு மாணவர் போல்தான் இருக்கிறார் என்றாலும் கதைப்படி தனுஷ் ஒரு பள்ளி ஆசிரியர். படத்தில் கல்வியை வியாபாரமாக்கும் நிறுவனங்களை குறிவைத்து பேசப்பட்டுள்ளது. கல்வியை வியாபாரமாக்கும் ஒரு தொழிலதிபராக இருக்கிறார் சமுத்திரக்கனி.
தனியார் பள்ளிகளின் சார்பாக மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளை எடுத்து நடத்துவதற்காக ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் ஒரு ஆசிரியரை அனுப்புகிறார் சமுத்திரக்கனி. அப்படியாக ஒரு அரசு பள்ளிக்கு வாத்தியாராக தனுஷ் செல்கிறார்.
அரசு பள்ளிகளை இழுத்து மூடி அனைத்தையும் தனியார் வசம் கொண்டு வருவதே சமுத்திரகனியின் திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்ததான் தனுஷ் பள்ளிக்கு வந்துள்ளார் என நினைத்து பலரும் அவரை ஒதுக்குகிறார்கள்.
இதற்கு நடுவே தன்னை மக்களிடம் நிரூபிக்க வேண்டும், அதே சமயம் அரசு பள்ளிகளையும் காக்க வேண்டும். இந்த இரண்டு பணிகளையும் தனுஷ் எப்படி வெற்றிக்கரமாக முடிக்கிறார் என்பதே கதை.
படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரைலரை காண இங்கு க்ளிக் செய்யவும்.
![](https://cinepettai.com/wp-content/uploads/2023/10/logolow-4.png)