நல்லது செய்றதுக்காக எல்லாரும் அரசியலுக்கு வரணும்னு அவசியம் இல்ல – கெத்து காட்டி பேசிய தல அஜித்!.

Actor Ajith: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் அஜித்தும் முக்கியமானவர். சினிமாவில் பல காலங்களாக அஜித் ஒரு செல்வாக்குமிக்க நடிகராக இருந்து வருகிறார். சினிமா நடிகராக இருந்து ஒரு பேட்டி கூட கொடுப்பதில்லை என்றாலும் கூட அஜித் படத்திற்கான வரவேற்பு என்பது மட்டும் குறைவதே இல்லை.

அந்த அளவிற்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஆதரவையும் கொண்டுள்ளார் அஜித். துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு திரைப்படங்கள் நடிப்பதில் கொஞ்சம் இடைவெளி விட்டு உலகை சுற்ற சென்றுவிட்டார் அஜித். அதனால் அவரது அடுத்த படம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். இன்னும் சில மாதங்களில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என தெரிகிறது. அடுத்ததாக அஜித் எந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது பற்றி இன்னும் பெரிதாக தகவல்கள் வரவில்லை.

ajith
ajith
Social Media Bar

இந்த நிலையில் தற்சமயம் விஜய் அரசியலுக்கு வந்துள்ள செய்திதான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை துவங்கியுள்ளார். இந்த கட்சி வருகிற 2026 சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் என அறிவித்துள்ளார் விஜய்.

இந்த நிலையில் தற்சமயம் அஜித் அரசியல் குறித்து பேசியிருந்த ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது அதில் அஜித் பேசும்போது அனைவருமே அரசியலுக்கு வந்துதான் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

ஒவ்வொரு குடிமகனும் தங்களது பணியை சரியாக செய்தாலே நாடு நல்லப்படியாக இருக்கும் என கூறியிருந்தார். இந்த வீடியோவை தற்சமயம் விஜய் ரசிகர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.