அடுத்த நாகேஷ் ஆகணும்னுதான் சினிமாவிற்கு வந்தேன்!.. நடிகர் ஜெகனுக்கு இருந்த கனவு…

தமிழ் சினிமாவில் எவ்வளவோ பேர் காமெடி நடிகர் ஆக வேண்டும் என சினிமாவிற்கு வருகின்றனர். ஆனால் அனைவராலும் சினிமாவில் பெரும் இடத்தை பிடிக்க முடிவதில்லை. சிலர் ஒரு சில படங்களிலேயே காணாமல் போய்விடுகின்றனர்.

யோகி பாபு, பரோட்டா சூரி மாதிரியான சில நடிகர்கள்தான் நல்ல அங்கீகாரத்தை பெறுகின்றனர். இந்த நிலையில் அயன், கவண் மாதிரியான திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்த நடிகர் ஜெகன் தற்சமயம் பேட்டி ஒன்றில் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

விளம்பரங்களுக்கு கண்டெண்ட் எழுதும் நபராக வேலை பார்த்து வந்தவர் ஜெகன். பிறகு அவருக்கு நாடகங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

சினிமாவிற்கு வந்தப்போது நடிகர் நாகேஷைதான் ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு வந்தேன் என கூறியுள்ளார் ஜெகன். அடுத்த நாகேஷ் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஏனெனில் நாகேஷ் இதைதான் செய்வார் என்று இல்லாமல் எல்லா வகையான நடிப்பையும் வெளிப்படுத்தினார். நானும் அப்படியான நடிப்பை வெளிப்படுத்த நினைத்தேன்.

அதே போல நாகேஷ் நடித்த திரைப்படங்களில் காதலிக்க நேரமில்லை மற்றும் திருவிளையாடல் ஆகிய இரு திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் ஆகும் என கூறியுள்ளார் ஜெகன்.