News
இவன் வேற என்ன ரொம்ப டார்ச்சர் பண்றான் சார்!.. படப்பிடிப்பில் விஜய்க்கு தொல்லை கொடுத்த நடிகர்!..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து வரும் ஒரு நபராக நடிகர் விஜய் இருந்து வருகிறார். பெரும்பாலும் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெறும் வரவேற்பை கொடுக்கும் திரைப்படங்களாக இருந்து வருகின்றன.
ஆரம்பத்தில் விஜய் சினிமாவிற்கு வந்தபோது அவருக்கு அவ்வளவாக நடிக்க வராது. அதனால் நிறைய கேளிக்கும் கிண்டலுக்கும் உள்ளானார் நடிகர் விஜய். அதற்கு பிறகு அவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற துவங்கினார்.
தற்சமயம் தமிழில் டாப் நடிகர்களில் முக்கியமானவராக விஜய் இருக்கிறார். விஜய்க்கு என்று ஒரு தனியான ரசிக்கப்பட்டாளம் இருந்து வருகிறது. ஆனால் தொடர்ந்து அரசியல் கட்சியையும் துவங்கியிருக்கிறார் விஜய். அரசியல் கட்சி துவங்கியது முதலே இனிமேல் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா இல்லையா என்கிற பேச்சுக்கள் திரைத்துறையில் சென்று கொண்டிருக்கின்றன.

ஜெய்க்கு நடந்த நிகழ்வு:
இந்த நிலையில் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்த வருகிறது. சமீபத்தில் நடிகர் ஜெய் பேட்டி ஒன்றில் பேசும் பொழுது விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றி பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது விஜய்யுடன் சேர்ந்து பகவதி படத்தில் நடித்தது நல்ல எக்ஸ்பீரியன்ஸ் ஆக இருந்தது.
ஆனால் அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கு நடிக்கவே தெரியாது ஒவ்வொரு காட்சியிலும் நான் ஒழுங்காகவே நடிக்க மாட்டேன். அதை பார்த்துவிட்டு விஜய் அண்ணாவே இவன் சரிப்பட்டு வர மாட்டான் போல வேறு ஆளை மாற்றி விடலாம் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

கலாய்த்துவிட்ட விஜய்:
ஆனால் படபிடிப்பு எல்லாம் முடிந்து கடைசியாக ஒரு பாடல் மட்டும் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அப்பொழுது என்னிடம் டான்ஸ் மாஸ்டர் கிட்டாரை கேமராவுக்கு முன்பு பிடிக்குமாறு கூறினார். உடனே நானும் அந்த மாதிரி பிடித்தேன்.
உடனே மாஸ்டர் கற்பூர புத்தி சொன்னவுடனே செய்து விட்டாயே என்று கூறினார். அப்பொழுது அருகில் இருந்த விஜய் படபிடிப்பே முடிய போகிறது என்று கூறி என்னை கலாய்த்து விட்டார் என்று அந்த விஷயத்தை பகிர்ந்த ஜெய் கூறும் பொழுது மீண்டும் தளபதியுடன் சேர்ந்து நல்லபடியாக நடிக்க வேண்டும் என்று ஆசை என்று கூறி இருக்கிறார்.
