Tamil Cinema News
நானியுடன் கூட்டணி போடும் நடிகர் கார்த்திக்.. அடுத்து வந்த மாஸ் அப்டேட்..!
தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து 3 பாகங்களாக வந்து வெற்றி வாகை சூடி வருகிறது ஹிட் திரைப்படங்கள். இதுவரை வந்த 3 பாகங்களையும் நடிகர் நானிதான் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் மூன்றாம் பாகத்தில் அவரே கதாநாயகனாக நடித்தார்.
சமீபத்தில்தான் அந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஹிட் திரைப்படங்களை பொறுத்தவரை ஹிட் என்பது ஆந்திராவில் உள்ள காவல் துறையின் ஒரு பிரிவு ஆகும்.
தீர்க்கவே முடியாத கொலைக்குற்றங்கள் ஹிட் பிரிவுக்கு வரும். அதில் இருக்கும் காவலர்கள் குற்றவாளியை கண்டுப்பிடிக்கும் அளவிற்கு திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு பாகத்தில் ஹிட் பிரிவில் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி வில்லனை கண்டுப்பிடிப்பது கதையாக இருக்கும்.
அதே மாதிரி ஒவ்வொரு படம் முடியும்போதும் அடுத்த பாகத்திற்கு யார் கதாநாயகன் என்பதை படத்தில் காட்டி விடுவார்கள். ஹிட் 2 திரைப்படத்தில் க்ளைமேக்ஸில் நானி வருவார்.
அதே போல இப்போது ஹிட் 3 திரைப்படத்தில் காவல் அதிகாரியாக க்ளைமேக்ஸில் நடிகர் கார்த்தி வருகிறார். எனவே ஹிட் 4 திரைப்படத்தில் அவர்தான் கதாநாயகனாக நடிப்பார் என உறுதியாகி உள்ளது. ஒருவேளை நானியும் கார்த்தியும் சேர்ந்து கூட நடிக்கலாம் என பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
