பிணம் அழுவுற சத்தம் கேட்கும்!.. குணா குகைக்குள் போறதே ஆபத்து!.. உண்மையை விளக்கும் நடிகர் கிருஷ்ணா!..

Manjummal Boys: மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் வெளியானதில் இருந்து குணா திரைப்படமும் குணா திரைப்படத்தில் வரும் குகையும் பிரபலமான விஷயமாக பேசப்பட்டு வருகிறது.

கொடைக்கானலில் ஒரு குகையில்தான் குணா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு அந்த குகைக்கு குணா குகை என பெயர் வைத்து அது சுற்றுலா இடமாகவும் மாற்றப்பட்டது. ஆனால் அந்த குகையில் ஒரு பகுதியில் மட்டும் பெரும் ஆழத்துடன் கூடிய ஒரு குழி உண்டு.

manjummel-boys-malayalam
manjummel-boys-malayalam
Social Media Bar

அதற்குள் யார் விழுந்தாலும் அவர்களை மேலே கொண்டு வருவது என்பது கடினமான விஷயம். இதை கதைகளமாக கொண்டுதான் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் உருவாகி இருந்தது. இந்த நிலையில் ஏற்கனவே இந்த மாதிரியான  கொடைக்கானல் தொடர்பான மற்றொரு திரைப்படத்தில் நடித்தவர் நடிகர் கிருஷ்ணா.

மர்மமான குணா குகை:

இவர் நடித்த கழுகு என்கிற திரைப்படத்தில் இந்த மாதிரி பள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் ஆட்களின் உடலை மீட்டு வரும் நபராக கிருஷ்ணா நடித்திருப்பார். அதில் அவர் தெரிந்து கொண்ட அனுபவம் குறித்து கூறும் பொழுது இந்த உடலை மீட்பவர்கள் கீழே செல்லும் பொழுது நிறைய இடங்களில் ஏற்கனவே இருந்த உடல்களும் கை கால்களும் கிடக்கும்.

Guna_cave_kodai
Guna_cave_kodai

இருந்தாலும் அவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சென்று அன்று இரவு பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அப்பொழுது ஏதாவது ஒரு திசையில் இருந்து அவர்களுக்கு ஒரு சத்தம் வரும். மறுநாள் அவர்கள் அந்த திசையை நோக்கி செல்லும் பொழுது 90% அவர்களுக்கு இறந்தவர்களின் உடல் கிடைத்துவிடும் என்று ஒரு மர்மான விஷயத்தை கூறியிருக்கிறார் கிருஷ்ணா.

இறந்த பிறகும் கூட தனது உடலை எடுக்க வருபவர்களுக்கு குறிப்பு கூறுவதற்காக அவர்களின் ஆன்மாக்கள் அந்த சத்தங்களை எழுப்புகின்றன என்பது கிருஷ்ணாவின் வாதமாக இருக்கிறது. இப்படி மர்மங்கள் நிறைந்த ஒரு விஷயமாகவே குணா படத்தில் வரும் குகை இருக்கிறது.