Connect with us

சின்ன வயசுல இருந்தே அந்த நடிகையைதான் கல்யாணம் பண்ணிக்க இருந்தேன்!.. அவருக்கு அவரே கிசு கிசு எழுதிய மணிக்கண்டன்!..

manikandan nagma

Latest News

சின்ன வயசுல இருந்தே அந்த நடிகையைதான் கல்யாணம் பண்ணிக்க இருந்தேன்!.. அவருக்கு அவரே கிசு கிசு எழுதிய மணிக்கண்டன்!..

Social Media Bar

Good night Manikandan: தற்சமயம் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் குட் நைட் மணிக்கண்டன் முக்கியமானவர். கடந்த 16 வருடங்களாகவே தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிப்பதற்கு முயற்சி செய்து வருகிறார் மணிகண்டன்.

தற்சமயம் மக்கள் அறியும் வகையில் அவர் பிரபலமாகி இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது ஜெய்பீம் திரைப்படம்தான். இந்த திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமும் அதற்காக அவர் வெளிப்படுத்திய நடிப்பும் வெகுவாக பேசப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர் நடித்த குட் நைட் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்சமயம் லவ்வர் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார் மணிகண்டன். நாளை 09.02.2023 அன்று இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது. ரஜினி நடிக்கும் லால் சலாம் திரைப்படத்திற்கு போட்டியாக இந்த படம் வெளியாகிறது.

actor-manikandan
actor-manikandan

இந்த நிலையில் படம் தொடர்பான ப்ரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளார் மணிகண்டன். இப்போதெல்லாம் பல யூ ட்யூப் சேனல்களுக்கு பேட்டியளிப்பதுதான் பெரும் ப்ரோமோஷனாகி வருகிறது. அந்த வகையில் ஒரு ப்ரோமோஷனில் பேசும்போது அவரிடம் உங்களை குறித்து நீங்களே ஒரு கிசுகிசு சொல்லுங்கள் என கேட்டுள்ளனர்.

அப்போது கூறிய மணிகண்டன். நான் சிறுவயதாக இருக்கும்போது காதலன் திரைப்படத்தை பார்த்து நடிகை நக்மா மீது காதல் கொண்டேன். இவ்வளவு அழகாக எல்லாம் பெண்கள் இருப்பார்களா என இருந்தது. அப்போது எனது தாயிடம் நான் திருமணம் செய்துக்கொண்டால் நக்மாவைதான் திருமணம் செய்துக்கொள்வேன் என கூறியிருந்தேன்.

இப்போது வரை எனக்கு பிடித்த நடிகையாக நக்மாதான் இருக்கிறார் என வெளிப்படையாக கூறியிருந்தார் மணிகண்டன்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top