News
நான் ஒன்னும் விஜய் படத்துல நடிக்கல!.. பிரசாந்த் சொன்ன பதில்!. என்ன இருந்தாலும் ஈகோ டச் பண்ண கூடாது…
Actor Prasanth: 12 ஆம் வகுப்பு முடித்தவுடனேயே வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். முதல் படத்திலேயே அவருக்கு அதிகமான வரவேற்பு கிடைத்தது. யாரும் எதிர்பார்க்காத வெற்றியை அந்த படம் கொடுத்தது.
அதற்கு பிறகு செம்பருத்தி, ஜீன்ஸ் என அவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் படங்களாகதான் இருந்தன. ஆனால் இப்போது நடிகர் பிரசாந்த்க்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்துள்ளன. அவர் திரைப்படங்கள் நடித்தே பல வருடங்கள் ஆகிவிட்டன.

அவர் சரியான கதைகளை தேர்ந்தெடுக்காததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்சமயம் விஜய் கதாநாயகனாக நடிக்கும் கோட் திரைப்படத்தில் விஜய்யின் நண்பனாக நடிக்கிறார் பிரசாந்த். நேற்று பத்திரிக்கையாளர்கள் பிரசாந்தை சந்தித்தப்போது சார் நீங்க விஜய் படத்துல நடிக்கிற அனுபவம் எப்படியிருக்கு என கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்த நடிகர் பிரசாந்த் விஜய் படத்தில் நான் நடிக்கவில்லை. விஜய்யோடு சேர்ந்து நடிக்கிறேன் என வேண்டுமானால் கூறலாம் என கூறியிருக்கிறார். இந்த பதில் குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறும்போது விஜய் சினிமாவிற்கு அறிமுகமாகும்போதே நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தார்.
செம்பருத்தி படம் வெளிவந்தப்போது அந்த படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் அலைந்ததாக விஜய்யே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அப்படி விஜய்க்கு முன்பு வந்த நடிகராக பிரசாந்த் இருக்கும்போது விஜய் படத்தில் பிரசாந்த் நடிக்கிறார் என கூறினால் அதை எப்படி அவர் ஒப்புக்கொள்வார் என கூறியுள்ளார்.
