எந்த பட குழுவும் அந்த பக்கமே போனது இல்ல!.. உயிருக்கே ஆபத்து!.. ஆனாலும் ரிஸ்க் எடுத்த நடிகர் ப்ரித்திவ்ராஜ்!.
Actor Pritiviraj: தமிழ் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் பிருத்திவிராஜ். பிரித்திவிராஜ் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் மலையாளத்தில் நிறைய திரைப்படங்களை எடுத்திருக்கிறார்.
மலையாளத்தில் அதிக திரைப்படம் தயாரிக்கும் பிரித்விராஜ் ஏன் தமிழில் தயாரிப்பது இல்லை என்று சிலருக்கு கேள்வி உண்டு. மலையாள சினிமாவை பொறுத்தவரை 10 கோடிக்கு உள்ளேயே ஒரு சிறப்பான படத்தை தயாரித்து விட முடியும்.
ஆனால் தமிழ் சினிமாவில் அதற்கான வாய்ப்பே கிடையாது என்பதால் மலையாளத்தில் திரைப்படங்களை இயக்குகிறார் பிரித்விராஜ். மோகன்லால் மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து கூட குறைந்தபட்ஜெட்டில் மலையாளத்தில் திரைப்படம் தயாரிக்க முடியும் என்கிற நிலை இருப்பதால் தொடர்ந்து அவர் அங்கு படம் தயாரித்து வருகிறார்.
படப்பிடிப்பில் பட்ட கஷ்டங்கள்:
இந்த நிலையில் அவர் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் ஆடுஜீவிதம். வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்ற இளைஞர் 3 வருடங்கள் பாலைவனத்தில் மாட்டிக் கொள்கிறார். அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு பெருவாரியான வரவேற்பும் இருந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரித்விராஜ் கூறும்பொழுது கொரோனா சமயத்தில் நாங்கள் ஒரு பாலைவனத்தில் படம் பிடிப்பதற்காக சென்று அங்கு மாட்டிக் கொண்டு விட்டோம்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அந்த பாலைவனத்திலேயேதான் இருந்தோம் திரும்ப ஊருக்கு எப்போது செல்வோம் என்கிற நம்பிக்கை கூட இல்லாமல் இருந்தோம். அதன் பிறகு ஒன்றரை வருடங்கள் படபிடிப்பே நடத்தவில்லை பிறகு மீண்டும் படப்பிடித்து துவங்கிய பொழுது சகாரா பாலைவனத்தின் நடுப்பகுதிக்கு சென்று படப்பிடிப்பை நடத்தினோம்.
இதுவரை மனித காலடி தடங்களே படாத இடங்களுக்கு எல்லாம் படப்பிடிப்பிற்காக சென்றிருக்கிறோம். எனக்கு தெரிந்தவரை இதுவரை திரைப்படம் எடுத்த யாருமே அங்கெல்லாம் சென்றிருக்கவே மாட்டார்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு இந்த திரைப்படம் படமாக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் பிருத்விராஜ். வருகிற மார்ச் 28 இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.