Connect with us

சூப்பர் ஸ்டார் கொடுத்த அந்த வாய்ப்பை உதறி தள்ளிய செந்தில்… இந்நேரம் கோடீஸ்வரனா ஆகியிருக்க வேண்டியது!.. ஜஸ்ட் மிஸ்..

senthil rajinikanth

Cinema History

சூப்பர் ஸ்டார் கொடுத்த அந்த வாய்ப்பை உதறி தள்ளிய செந்தில்… இந்நேரம் கோடீஸ்வரனா ஆகியிருக்க வேண்டியது!.. ஜஸ்ட் மிஸ்..

Social Media Bar

Rajinikanth and senthil : தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக காம்போவாக இருந்து காமெடி செய்து வந்தவர்கள் கவுண்டமணியும் செந்திலும் ஆவார்கள். இவர்கள் இருவரும் இணைந்த காமெடிகளுக்கு எக்கச்சக்கமான வரவேற்பு இருந்ததால் தொடர்ந்து இவர்கள் இணைந்தே நகைச்சுவை செய்து வந்தனர்.

ஆனால் கவுண்டமணியை பொறுத்தவரை அவருடன் தொடர்ந்து பயணிப்பது என்பது கடினமான ஒரு விஷயமாகும். பெரும் நடிகர்கள் பலரும் கூட கவுண்டமணியிடம் இருந்து சில நாட்களில் விலகி இருக்கின்றனர். இந்த நிலையில் செந்திலுக்கும் கவுண்டமணிக்கும் கூட கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

அதற்கு பிறகு சில நாட்களில் செந்திலும் கவுண்டமணியும் தனித்தனியாக பிரிந்தனர் இந்த சமயத்தில் தான் செந்திலுக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கும் இடையே நட்பு உண்டானது. அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது திரைப்படங்களில் தொடர்ந்து செந்திலுக்கு வாய்ப்பு கொடுக்க துவங்கினார்.

அருணாச்சலம், முத்து, வீரா, படையப்பா என்று பல படங்களில் ரஜினியுடன் செந்தில் இருப்பதை பார்க்க முடியும். இந்த நட்பு பல நாட்கள் நீடித்தது அதன் தொடர்ச்சியாகதான் தற்சமயம் லால் சலாம் திரைப்படத்தில் கூட செந்தில் நடித்திருக்கிறார். ஒருமுறை செந்தில் ஒரு பேட்டியில் கூறும் பொழுது செந்திலுக்கு பட வாய்ப்புகள் எல்லாம் குறைந்த பிறகு ஒரு நாள் ரஜினிகாந்த் செந்திலை அழைத்து என்னை வைத்து ஒரு திரைப்படம் தயாரித்து கொள்கிறீர்களா என கேட்டிருக்கிறார்.

ஆனால் அப்பொழுது செந்தில் பணக்கஷ்டத்தில் இருக்கும் பொழுது ரஜினிகாந்தை வைத்து எப்படி அவரால் ஒரு படத்தை தயாரிக்க முடியும் என்பதால் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டார். ஆனால் அதன் பிறகு தான் சொன்ன பதிலுக்காக வருத்தப்பட்டு இருக்கிறார் செந்தில். ஏனெனில் கடன் வாங்கியாவது ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை எடுத்திருந்தால் இப்போது பெரிய கோடீஸ்வரனாகி இருக்கலாமே.

ஒருநாள் ரஜினிகாந்திடம் கால் சீட்டு கிடைப்பதற்கு எல்லோரும் வரிசையில் நிற்கும் போது நமக்கு கிடைத்த பெரும் வாய்ப்பை விட்டு விட்டோமே என்று வருந்தி இருக்கிறார் செந்தில் இதனை அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்

Articles

parle g
madampatty rangaraj
To Top