Connect with us

ஏழைகள்னா அவ்வளவு கேவலமா போச்சா!.. பொதுவெளியில் ரஜினி செய்த காரியம்!.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!..

rajinikanth

News

ஏழைகள்னா அவ்வளவு கேவலமா போச்சா!.. பொதுவெளியில் ரஜினி செய்த காரியம்!.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!..

Social Media Bar

Rajinikanth: தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் தான். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் தனது பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் இப்போது வரை தமிழ் சினிமாவில் பெரும் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சினிமாவை பொருத்தவரை ரஜினிகாந்திற்கு இணையான ஒரு நடிப்பை வெளிப்படுத்தும் இன்னொரு நடிகர் இருக்கிறாரா? என்பது சந்தேகமே அப்படியான சில படங்களையும் ரஜினிகாந்த் கொடுத்திருக்கிறார். உதாரணமாக பாட்ஷா மாதிரியான திரைப்படங்களில் வேறு நடிகர்கள் நடித்தால் அதே மாதிரியான சிறப்பான திரைப்படமாக பாட்ஷா இருக்குமா என்பது சந்தேகம் தான்.

சினிமாவில் அப்படியெல்லாம் புகழப்படும் நடிகராக ரஜினிகாந்த் இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகும் ஒரு நடிகராக தான் அவர் இருக்கிறார். மற்ற நடிகர்களை போல பொது மக்களுக்கு பெரிதாக ரஜினிகாந்த் நன்மைகள் செய்தது கிடையாது.

சர்ச்சைக்குள்ளான செயல்:

பேரிடர் காலங்களில் கூட சின்ன நடிகர்கள் செய்யும் அளவிற்கு கூட ரஜினிகாந்த எந்த உதவிகளும் செய்தது கிடையாது. ஆனால் ஆன்மீக ரீதியாக எந்த பண உதவியும் செய்ய தயாராக இருப்பார் ரஜினிகாந்த். இப்படி ரஜினிகாந்த் குறித்து நிறைய விமர்சனம் இருக்கும் நிலையில் தற்சமயம் அம்பானி வீட்டிற்கு விழாவிற்கு சென்ற ரஜினிகாந்த் அங்கு செய்த ஒரு சம்பவம் நேற்று முதல் சர்ச்சையாகி வருகிறது.

ஒரு இடத்தில் நின்று தனது மனைவியுடன் போட்டோ எடுத்துக்கொள்ள அழைக்கும் பொழுது மனைவிக்கு மேக்கப் செய்யும் ஏழைப் பெண் ஒருவரும் நேராக வந்துவிட்டார்.

உடனே அவரை தவிர்த்து விட்டு ரஜினிகாந்த் போட்டோவிற்கு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை ஷேர் செய்யும் நெட்டிசன்கள் ஒரு பெரிய நடிகர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளக் கூடாது என்று இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

To Top