திருடன் கூட பழக்கம் வச்சிக்கிட்டது தப்பா போச்சு!.. சந்தானம் வீடு தேடி வந்த போலீஸ்!.. இப்படியெல்லாம் நடந்துச்சா!..
Actor Santhanam: தமிழில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். சந்தானம் நடிக்கும் திரைப்படங்களிலேயும் கூட அவர் காமெடி கதாநாயகனாகதான் நடித்து வருகிறார்.
பொதுவாக காமெடி நடிகர்கள் நிஜமாக வாழ்க்கையில் உள்ள மாந்தர்களை அடிப்படையாக கொண்டுதான் தங்களுடைய காமெடி கதாபாத்திரங்களையும் உருவாக்குவார்கள். உதாரணத்திற்கு வடிவேலு திரைப்படங்களில் செய்யும் காமெடி கதாபாத்திரங்கள் எல்லாம் மதுரையில் அவர் நிஜமாக பார்த்த கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்தான்.
அந்த வகையில் சிறுத்தை படம் தயாரான போது அதில் சந்தானம் காமெடியனாக நடிக்க வேண்டும் என்று கூறும்போது அது ஒரு திருடன் கதாபாத்திரம் எனவே அதற்கு தகுந்தாற் போல காமெடிகளை தயார் செய்யுமாறு சந்தானத்திடம் கூறிவிட்டார் இயக்குனர்.

எனவே சந்தானம் அவரது ஏரியாவில் இருக்கும் திருடன் ஒருவருடன் பழகி அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை காமெடிக்காக எடுத்துகொண்டார். உண்மையில் அவரது பெயர்தான் காட்டுப்பூச்சி என்னும் பெயராகும். ஆனால் அதனால் சில பிரச்சனைகளும் வந்தன.
ஒரு நாள் சந்தானத்தின் வீட்டிற்கு வந்த போலீஸார் அந்த காட்டுப்பூச்சி என்னும் நபர் ஐந்து நபர்களின் மொபைல் போனை திருடி சென்றுவிட்டதாகவும் அவர் சந்தானத்தோடு பழக்கத்தில் இருப்பதால் சந்தானத்தை விசாரிக்க வந்ததாகவும் கூறியுள்ளனர்.
படத்திற்காக பழக போய் இப்படியொரு சிக்கலில் சிக்கியிருக்கிறார் சந்தானம்.