News
கமல்க்கிட்ட கூட இல்லாத அந்த விஷயம் விஜய்க்கிட்ட இருக்கு!.. விஜய்தான் சிறந்த நடிகர்!.. நடிகர் சதீஸ் ஓப்பன் டாக்!..
லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பல நாடுகளில் வெகு நாட்களாக நடந்து வருகின்றன. இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வெகு காலங்களுக்கு பிறகு விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதை கையில் எடுக்கிறார் என்பதே பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில் அவருடன் பைரவா மற்றும் கத்தி ஆகிய இரண்டு படங்களில் நடிகர் சதீஸ் காமெடியனாக நடித்திருந்தார்.

உண்மையிலேயே அவர்கள் இருவருக்குமான காமெடி காம்போ நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது. ஆனால் ஏனோ அதற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து படம் நடிக்கவே இல்லை. இந்த நிலையில் ஒரு பேட்டியில் சதீஸிடம் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் என கேட்டால் யாரை கூறுவீர்கள் என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த சதீஸ் என்னை பொறுத்தவரை நடிகர் விஜய்யைதான் நான் சிறந்த நடிகராக நினைக்கிறேன். ஏனெனில் தமிழ் சினிமாவில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பிடித்த நடிகராக விஜய் இருக்கிறார். இவர்கள் எல்லாம் சிறந்த நடிகர்கள் என கூறும் நடிகர்களுக்கு கூட இப்படியான ரசிக பட்டாளம் உள்ளதா என தெரியவில்லை.
கிட்டத்தட்ட மூன்று தலைமுறையினருக்கும் பிடித்த நடிகராக விஜய் இருக்கிறார் என்கிறா நடிகர் சதீஸ். உண்மையில் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக கமல்ஹாசன் தான் பார்க்கப்படுகிறார். அப்படியானால் சதீஸ் அவரைதான் கூறுகிறாரா என இதுக்குறித்து கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள்.
