Tamil Cinema News
பட வாய்ப்பு பிரச்சனைகளால் சிம்பு எடுத்த புது முடிவு..! நல்ல ஐடியாதான்.!
சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் அதிக பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. சின்ன வயதிலேயே சிம்புவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
திரைப்படங்களில் நடிப்பதை தாண்டியும் பாடல்கள் பாடுவதில் சிம்புவுக்கு திக வரவேற்பு அதிக ஆர்வம் இருநது வந்தது. அதனை தொடர்ந்து நிறைய படங்களில் பாடல்களை பாடி இருக்கிறார் சிம்பு. சிம்பு நடித்து வெளியாகும் படங்களில் ஒரு படத்தில் ஒரு பாடலாவது சிம்பு பாடியிருப்பார்.
பெரும்பாலும் சிம்பு பாடும் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருப்பார். அதே மாதிரி தெலுங்கு திரைப்படங்களிலும் நிறைய பாடி இருக்கிறார் சிம்பு. இப்படியே கிட்டத்தட்ட சிம்பு 150 பாடல்கள் பாடியிருப்பதாக கூறப்படுகிறது.
சிம்புவுக்கு வந்த வாய்ப்பு:
இந்த நிலையில் சமீபத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு சிம்புவும் சென்றிருந்தார் அப்பொழுது சிம்பு அவர் பாடிய பாடல் ஒன்றை அங்கு பாடிய போது பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனை பார்த்த மற்ற நாடுகள் தற்சமயம் சிம்புவை இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு அழைத்து வருகின்றனர்.
சிம்பு அங்கு சென்று தான் பாடிய 150 பாடல்களில் ஏதாவது ஒரு 20 பாடல்களை தேர்ந்தெடுத்து பாடினால் போதும் என்று அவர்கள் கேட்டு வருகின்றனர். பட வாய்ப்புகள் தாமதமாகி வரும் சமயங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு இந்த இசை நிகழ்ச்சி உதவும் என்பதால் சிம்புவும் இது குறித்து யோசித்து வருவதாக கூறப்படுகிறது.