நடிகர் சூரி தற்சமயம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக மாறி இருக்கிறார். இதுவரை காமெடி நடிகராக நடித்து வந்த சூரிக்கு விடுதலை திரைப்படம் ஒரு பெரிய மாற்றமாக அமைந்தது.
விடுதலை திரைப்படத்தில் சூரியின் நடிப்பு அதிக வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே வித்தியாசமான கதை களங்களை கொண்டதாக இருந்தது.
அதனால் இப்பொழுது சூரி ஒரு கவனம் பெறும் நடிகராக மாறி இருக்கிறார் தொடர்ந்து படங்களின் கதைகளம் மீது சூரி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தனது மேலாளருக்கு அவர் செய்த உதவி குறித்து சமீபத்தில் பேசியிருந்தார் சூரி. எனது மேலாளர் என்னிடம் காரியம் ஆக வேண்டும் என்று எப்பொழுதுமே காக்கா பிடித்தது கிடையாது.
ஒருமுறை என்னிடம் வந்து ஒரு திரைப்படம் தயாரிக்கலாம் என்று இருக்கிறேன் அது குறித்து பைனான்சியரிடம் பேசி இருக்கிறேன். அவர்கள் யாராவது ஒரு பெரிய ஆள் கையெழுத்து போட்டால் தான் பணம் தருவேன் என்று கூறுகிறார்கள்.
எனவே நீங்கள் போட முடியுமா என்று என்னிடம் கேட்டார். நானும் சரி போடுகிறேன் என்று கூறினேன். அவர் சந்தனத்தை கதாநாயகனாக வைத்து திரைப்படம் தயாரிக்க போவதாக கூறினார். சந்தானம் நடிப்பில் வந்த பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் தான் அது.
நான் ஒரு காமெடி நடிகர் என்னிடம் இன்னொரு காமெடி நடிகனை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்கு உதவி செய்யுமாறு கேட்டார் எனது மேலாளர். அவரது துணிச்சல் எனக்கு பிடித்திருந்தது எனவே நான் அவருக்கு உதவி செய்தேன் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் சூரி.