Tamil Cinema News
அடுத்தவனை வாழ வச்சி பழகுங்க.. விமர்சகர்களை வச்சு செஞ்ச நடிகர் ஸ்ரீ காந்த்..!
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வெகு பிரபலமான நடிகராக இருந்து வந்தவர்தான் நடிகர் ஸ்ரீகாந்த். அவர் நடித்த பல திரைப்படங்கள் அப்போது பெரிய நடிகராக இருந்த ஸ்ரீகாந்துக்கு போக போக மார்க்கெட் குறைந்தது.
பிறகு வெகு காலங்களுக்கு பிறகு நண்பன் திரைப்படத்தில் அவருக்கு ரீ எண்ட்ரி கிடைத்தது.அந்த திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் நன்றாக இருந்தாலும் கூட அதற்கு பிறகும் பெரிதாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் என்பது அவருக்கு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தற்சமயம் மீண்டும் வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் ஸ்ரீகாந்த். இதனால் அவருக்கு சினிமாவின் மீது இருந்த குறைகளை எல்லாம் இப்போது பேசி வருகிறார் ஸ்ரீகாந்த். அதில் அவர் கூறும்போது தயாரிப்பாளர்கள் எல்லாம் ஒரு நடிகரின் நடிப்பை பார்க்காமல் இவருக்கு பிசினஸ் இருக்கா என்றே பார்க்கின்றனர்.
நியாயமாக நண்பன் திரைப்படத்திற்கு பிறகு எனக்கு நல்ல பட்ஜெட்டில் திரைப்படங்கள் அமைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதே மாதிரி விமர்சனங்களை பார்த்து படத்திற்கு வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
விமர்சனம் செய்பவர்கள் அவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்களைதான் கூறுகின்றனர். அவர்களுக்கு பிடிக்காத படம் மற்றவர்களுக்கும் பிடிக்காது என கூற முடியாது. அதே போல படம் வெளியாகி ஒரு வாரம் ஓடினால்தான் பார்க்க வேண்டும் என நினைப்பதும் தப்பு.
ஒரு படம் ஓடுகிறது என்றால் அதில் 100 குடும்பம் வாழும். தமிழனின் அடிப்படையே மற்றவரை வாழ வைப்பதுதான் எனவே அதை செய்யுங்கள் என கூறியுள்ளார் ஸ்ரீகாந்த்.
