Connect with us

என் 25 வருச கனவு அவரால்தான் நிறைவேறினுச்சு!. நன்றி மிஸ்கின் சார்!.. மனம் திறந்த விஷால்!..

vishal mysskin

News

என் 25 வருச கனவு அவரால்தான் நிறைவேறினுச்சு!. நன்றி மிஸ்கின் சார்!.. மனம் திறந்த விஷால்!..

Social Media Bar

Actor Vishal : செல்லமே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷால். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதற்குப் பிறகு நிறைய திரைப்பட வாய்ப்புகள் விஷாலுக்கு கிடைத்தது. விஷால் நல்ல உயரமாக  இருந்ததாலேயே அவருக்கு சண்டை காட்சிகள் அதிகம் உள்ள படங்களில் அதிகமாக வாய்ப்புகள் கிடைத்தது.

முக்கியமாக சண்டக்கோழி திரைப்படத்தை சொல்லியாக வேண்டும் ஏனெனில் சண்டக்கோழி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விஜய்தான். ஆனால்  ஆனால் கதாநாயகனை விடவும் அவரது தந்தைக்கு அதிகமாக மாஸ் காட்சிகள் இருப்பதால் அதை குறைத்து கொண்டால் படத்தில் நடிப்பதாக கூறியிருக்கிறார் விஜய்.

ஆனால் அதற்கு இயக்குனர் லிங்குசாமி ஒப்புக் கொள்ளாத காரணத்தினால் விஜய் சண்டக்கோழி திரைப்படத்தில் நடிக்கவில்லை. பிறகு விஜய்க்கு பதிலாகதான் விஷால் நடித்தார் என்றாலும் கூட விஷாலுக்கு முக்கியமான திரைப்படமாக சண்டக்கோழி அமைந்தது.

vishal
vishal

அதற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் விஷால் நடித்தார். துப்பறிவாளன் திரைப்படம் அதில் முக்கியமானது டிடெக்டிவ் திரைப்படங்கள் தமிழில் அதிகம் வராத நிலையில் துப்பறிவாளன் தமிழ் சினிமாவிலேயே ஒரு முக்கியமான திரைப்படமாக இருந்தது.

ஆனால் அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் போது இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த படம் பாதியிலேயே நின்றுவிட்டது. இந்நிலையில் தற்சமயம் மீண்டும் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை ஆரம்பத்தில் இருந்து இயக்கவிருக்கிறார் விஷால்.

இது குறித்து சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றில் பேசிய விஷால் கூறும் பொழுது 25 வருடங்களாக எனக்கு இயக்குனராக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் தமிழ் சினிமாவிற்கு வந்த பொழுது எனக்கு இயக்குனர் ஆவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கதாநாயகன் ஆவதற்குதான் வாய்ப்பு கிடைத்தது இருந்தாலும் பரவாயில்லை கதாநாயகனாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம் என்று கதாநாயகனாவே நடித்துக் கொண்டிருந்தேன். தற்சமயம் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் என்னுடைய கனவை நினைவாக்கும் ஒரு விஷயமாக அமைந்திருக்கிறது என்று கூறி அதற்காக பலருக்கும் நன்றி தெரிவித்த விஷால் இயக்குனர் மிஷ்கினுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

To Top