தளபதியின் வழியில் அடுத்து புரட்சி தளபதி!.. களத்தில் இறங்கும் விஷால்!.. அடுத்த சம்பவம் ரெடி!..

Actor Vishal : வெகு நாட்களாகவே கட்சி துவங்க வேண்டும் என்று நினைத்து வந்த நடிகர் விஜய் தற்சமயம் தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை துவங்கி இருக்கிறார். இந்த கட்சி பெயரில் எழுத்துப் பிழை உள்ளது என்று சில பிரச்சினைகள் இருந்து வந்தது. ஆனால் அது ஒன்றும் பெரிய பிரச்சனையாக மாறவில்லை.

அதனை தாண்டி விஜய்க்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரும் அதே சமயத்தில் அவருக்கு நேர்மறையான விமர்சனங்களும் வந்து கொண்டுள்ளன. முக்கியமாக அரசியல் தலைவர்கள் பலரும் விஜய்யின் வரவை ஆதரித்திருக்கின்றனர்.

Social Media Bar

இன்னும் சிலர் அவர் பாஜகவின் ஆதரவில்தான் கட்சிக்கு வந்திருக்கிறார் என்று பேசுகின்றனர். திமுகவிற்கு எதிரான ஒரு கழகமாகத்தான் தமிழக வெற்றி கழகம் இருக்கும் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் விஜய்யை பொருத்தவரை தற்சமயம் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை மேலும் நாடாளுமன்ற தேர்தலிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

நடிகர்கள் கட்சி துவங்குவது என்பது தமிழ்நாட்டில் ஒன்றும் புதிது கிடையாது இது எப்போதும் நடந்து வரும் ஒரு விஷயமாகும். அந்த வகையில் தற்சமயம் புரட்சி தளபதி விஷாலும் கட்சி துவங்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. விஜய்யின் மக்கள் இயக்கம் போலவே விஷாலும் ஒரு இயக்கம் நடத்தி வருகிறார்.

தற்சமயம் அதனால் அந்த ரசிகர் கூட்டத்தை கொண்டு அவரும் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஷாலுக்கு அரசியல் மீது அதிக நாட்டம் உண்டு தொடர்ந்து அரசியல் குறித்து பேசி வருபவர் விஷால் என்பதால் அவர் கட்சி துவங்குவது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருக்காது என்கின்றனர் சினிமா துறையினர்!.