Connect with us

ஏன் இவ்வளவு வன்மம் புடிச்சி சுத்துறாங்கன்னு தெரியல… நெட்டிசன்கள் குறித்து ஓப்பன் டாக் கொடுத்த விஷ்ணு விஷால்!..

vishnu vishal

News

ஏன் இவ்வளவு வன்மம் புடிச்சி சுத்துறாங்கன்னு தெரியல… நெட்டிசன்கள் குறித்து ஓப்பன் டாக் கொடுத்த விஷ்ணு விஷால்!..

Social Media Bar

Actor Vishnu vishal : வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதற்கு பிறகு அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே சுவாரஸ்யமானதாக அமைந்ததால் தொடர்ந்து விஷ்ணு விஷாலின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது.

அவர் நடித்த குள்ளநரி கூட்டம், ராட்சசன், மாவீரன் கிட்டு, இன்று நேற்று நாளை போன்ற திரைப்படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படங்களாக இருந்து வந்தன. தற்சமயம் அவர் நடிப்பில் லால் சலாம் திரைப்படம் திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார்.

இந்த நிலையில் இதற்காக பேட்டி கொடுத்த விஷ்ணு விஷால் நமது சமூகம் மோசமான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு சம்பவத்தை கூறியிருந்தார். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற பேச்சுக்கள் சென்று கொண்டிருந்த பொழுது அதற்கு எதிராக விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

அது குறித்து அவர் பேசும் பொழுது அந்த பதிவை நான் ஒரு இந்திய குடிமகனாக போட்டேனே தவிர எந்த ஒரு அரசியல் காரணத்திலும் நான் அதை போடவில்லை. இதுவரை நான் எந்த விதமான அரசியல் பதிவுகளையும் போட்டதே கிடையாது.

ஆனாலும் மக்கள் அதற்கு எதிர்வினையாக பல கருத்துக்களை முன்வைத்தனர். ஏன் இந்த அளவிற்கு நமது சமூகம் மோசமாகிவிட்டது என எனக்கு தெரியவில்லை. ஒருவர் அவருடைய கருத்தை தெரிவிப்பதற்கு கூட இங்கு உரிமை இல்லாமல் போய்விட்டது என்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது என்று கூறிய விஷ்ணு விஷால் இந்த நிலை மாற வேண்டும் எப்போதும் ஒருவரை விமர்சிப்பதே ஒரு பழக்கமாக மாறிவிடக்கூடாது என நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

To Top