Connect with us

வில்லனாக களம் இறங்கும் கே.ஜி.எஃப் நடிகர்… அதிலும் அரசியல் செய்த வடக்கன்ஸ்.. எதுக்கு இந்த பொழப்பு..

News

வில்லனாக களம் இறங்கும் கே.ஜி.எஃப் நடிகர்… அதிலும் அரசியல் செய்த வடக்கன்ஸ்.. எதுக்கு இந்த பொழப்பு..

Social Media Bar

கே ஜி எஃப் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து இந்திய அளவில் பெரிதாக வரவேற்பு பெற்ற நடிகராக நடிகர் யஷ் இருந்து வருகிறார். கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு முன்பு யஷ் என்பவர் யார் என்று பலருக்கும் தெரியாது என்று கூறலாம்.

ஆனால் கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றி அவரை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது. இந்த நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்று வருகிறார் நடிகர் யஷ். பாலிவுட்டில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

யஷ்ஷிற்கு கிடைத்த வாய்ப்பு:

இந்த நிலையில் பாலிவுட்டில் திரைப்படமாக வர இருக்கும் ராமாயணம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் யஷ். இந்த திரைப்படத்தில் ஏற்கனவே கதாநாயகனாக நடிக்கிறார் நடிகர் ரன்பீர் கபூர்.

நடிகை சாய் பல்லவி இதில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில் இராவணன் கதாபாத்திரத்தில் நடிகர் யஷ் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இதற்காக அவருக்கு 200 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளது இதுவரையில் வில்லனாக நடிக்கும் ஒரு நடிகருக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்ததே கிடையாது என்று கூறப்படுகிறது.

வடக்கன்ஸ் அரசியல்:

அரசியல் ரீதியாக பார்க்கும் பொழுது புராணத்திலேயே ராமர் வட இந்தியராகவும் ராவணன் தென்னிந்தியராகவும் இருப்பதை பார்க்க முடியும் அதே முறையை திரைப்படத்திலும் பின்பற்றி கதாநாயகனாக நடிக்கும் ரன்பீர் கபூர் வட இந்தியராகவும் வில்லனாக நடிக்கும் யஷ் தென்னிந்தியராகவும் இருப்பதை பார்க்க முடிகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top