தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பல பன்முகங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் நடிகர்களாக இருக்கும் ஒரு சிலர் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், திரைகதை எழுத்தாளராகவும், பாடகராகவும் என பன்முகங்களைக் கொண்டவர்களாக சினிமாவில் இருந்து வருவார்கள்.
இந்நிலையில் ஒரு சில நடிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு படத்தில் பாடலை பாடி அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும். இதனால் அவர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் இருந்து படத்தில் பாடிய சில நடிகர்களின் பட்டியலை காண்போம்.
தமிழ் சினிமாவில் பாடல் பாடிய நடிகர்கள்
யாரும் எதிர்பாராத வகையில் ஆக்ஷனில், ரொமான்ஸில் கலக்கி கொண்டிருந்த நடிகர்கள் திடீரென்று சினிமாவில் பாடல்கள் பாடி வியப்பை ஏற்படுத்தி இருப்பார்கள். அந்த பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அவர்கள் அடுத்தடுத்து நடிக்கும் பாடல்களில் ஒரு சில பாடல்களை பாடுவார்கள். இதை அவர்கள் வழக்கமாகவே கொண்டு இருப்பார்கள். இந்நிலையில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த, யாரும் எதிர்பாராத பாடர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் சித்தார்த்
நடிகர் சித்தார்த் தமிழில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும் இவர் உதவி இயக்குனராகவும் பணி புரிந்திருக்கிறார். இந்நிலையில் பல படங்களில் பாடகராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வரும் இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற படத்தில் “அடடா அடடா” என்ற பாடலை பாடியிருப்பார் இது தமிழ் ரசிகர்களுக்கு தற்போது வரை பேவர் பாடல் ஆகும்.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் பானுப்பிரியா இருவரும் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் “வெத்தலை போட்ட” என்ற பாடல் நடிகர் கார்த்திக் பாடியுள்ளார். இது தற்போது வரை ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் அளவிற்கு இருக்கும்.
நடிகர் நகுல்
இவர் நடிகர் விக்ரமனின் அசத்தலான நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அந்நியன். இந்த திரைப்படத்தில் வரும் “காதல் யானை” என்ற பாடல் நடிகர் நகுல் பாடியுள்ளார்.
நடிகர் விஷால்
சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த மத கஜ ராஜா வெளிவரப்படாமல் உள்ள திரைப்படம் ஆகும். இந்த படத்தில் விஷால் பாடிய “மை டியர் லவ்வர்” என்ற பாடலை நடிகர் விஷால் பாடி இருப்பார்
நடிகர் அஜித்
நடிகர் அஜித் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வாலி. இந்த திரைப்படத்தில் வரும் “சோனா சோனா” என்ற பாடலை ஹரிஹரன் மற்றும் அஜித் பாடியுள்ளார்கள்.
நடிகர் விடிவி கணேஷ்
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்து இங்க என்ன சொல்லுது திரைப்படம். இந்த திரைப்படத்தை வின்சென்ட் செல்வா இயக்கிருந்தார்கள். இந்த படத்தில் வரும் “பட்டாம் பூச்சி ” என்ற பாடல் ஒன்றை நடிகர் விடிவி கணேஷ் பாடியிருப்பார்.








