Connect with us

ஒருத்தருக்கு சுண்டு விரலே போய்டுச்சு.. தங்கலான் படத்தில் நடிகர்கள் பட்ட அவதிகள்!..

vikram thangalaan

News

ஒருத்தருக்கு சுண்டு விரலே போய்டுச்சு.. தங்கலான் படத்தில் நடிகர்கள் பட்ட அவதிகள்!..

Social Media Bar

தமிழில் தரமான திரைப்படங்கள் எடுப்பவர்கள் என்று கூறப்படும் இயக்குனர்களில் இயக்குனர் பா ரஞ்சித்தும் ஒருவர். பா.ரஞ்சித் சமூகப் பிரச்சினைகளை பேசும் அதே நேரத்தில் வரலாற்றில் நடந்த பல விஷயங்களை தனது திரைப்படம் மூலமாக வெளிக் கொண்டு வருவார்.

சிங்கப்பூரில் தமிழ்நாட்டு மக்கள் பண்ணை அடிமை முறையில் பணிபுரிந்ததை தனது கபாலி திரைப்படத்தில் கூறி இருப்பார். அதேபோல காலா திரைப்படத்தில் தாராவியில் வாழும் தமிழ் மக்கள் பற்றி பேசியிருப்பார்.

இந்த நிலையில் தற்சமயம் மற்றொரு வரலாற்று திரைப்படமாக தங்கலான் திரைப்படத்தை எடுத்திருக்கிறார் பா.ரஞ்சித். இந்த திரைப்படத்தில் பணிபுரிந்த அனைவருமே படப்பிடிப்பில் மிகவும் கஷ்டப்பட்டதாக கூறுகின்றனர். அதில் ஒருவர் கூறும் பொழுது படத்தில் நடித்த அனைவருமே செருப்பை போடாமல்தான் படத்தில் நடித்தோம்.

ஏனெனில் அந்தப் பகுதியில் செருப்பு போட்டுக் கொண்டு நடக்க முடியாது அப்படியான ஒரு சூழல். அதில் விக்ரம் மாதிரியான நடிகர்கள் கோவணம் கட்டிக்கொண்டு நடிப்பது போன்ற காட்சி இருந்த பொழுது இயக்குனர் ரஞ்சித்தும் கூடவே கோவணம் கட்டிக்கொண்டு நின்றார்.

எதற்கு என்று கேட்கும் பொழுது அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரும் கட்டிக்கொண்டு நின்றார். ஆனால் பல இடங்களுக்கு செருப்பு இல்லாமல் பயணம் செய்த பொழுது பலருக்கும் காலில் அடிபட்டது அதில் ஒருவருக்கு சுண்டு விரலே இல்லாமல் போய்விட்டது.

எப்படியும் படபிடிப்பு முடிவதற்குள் ஒவ்வொரு நபருக்கும் 100க்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டிருக்கும் என்று அவர் கூறுகிறார். விக்ரமும் கூட தங்கலான் படம் குறித்து கூறும் பொழுது மற்ற எந்த படத்தையும் விட தங்கலான் படத்திற்கு அதிகமாக கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

To Top