Actress
ஏடா கூட அழகில்.. ஐஸ்வர்யா மேனனின் அசத்தும் வீடியோ…
சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசையில் வந்து முதலில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இப்பொழுது கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
2012 ஆம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக இவர் நடித்திருந்தார். அதற்கு பிறகு ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு மாதிரியான திரைப்படங்களில் இவருக்கு தொடர்ந்து துணைக் கதாபாத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு பிறகு அழகை மேம்படுத்திய ஐஸ்வர்யா மேனன் தமிழ் படம் 2 திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவருக்கு ஹிப்ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் திரைப்படத்திலும் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.
தற்சமயம் வருடத்திற்கு ஒரு திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். இந்த நிலையில் மக்கள் மத்தியில் இன்னும் அதிக பிரபலம் அடைவதற்காக வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டு இருக்கிறார் அது இப்பொழுது அதிக பிரபலம் அடைந்து வருகிறது.
