Connect with us

படப்பிடிப்பில் நைட் ஒரு மணிக்கு அதை பண்ணுனார்.. ஜெயம் ரவி குறித்து ஓப்பன் டாக் கொடுத்த பூமிகா.!

jayam ravi bhoomika

News

படப்பிடிப்பில் நைட் ஒரு மணிக்கு அதை பண்ணுனார்.. ஜெயம் ரவி குறித்து ஓப்பன் டாக் கொடுத்த பூமிகா.!

Social Media Bar

தமிழில் ஒரு காலகட்டத்தில் அதிக ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு நடிகையாக இருந்தவர்தான் நடிகை பூமிகா. நடிகை பூமிகா தமிழில் குறைவான படங்களில்தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட அந்த திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றன.

பத்ரி திரைப்படத்தில் இவர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அதேபோல பிறகு ரோஜா கூட்டம் என்கிற படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிகை பூமிகா பெரும் வரவேற்பை பெறுவார் என்று நினைத்து வந்த நிலையில் அவருக்கான வாய்ப்பு என்பது சினிமாவில் குறைய தொடங்கியது.

அதற்கு பிறகு தெலுங்கு சினிமாவிற்கு சென்று முயற்சி செய்யத் துவங்கினார் பூமிகா. அங்கு சில நாட்கள் வரவேற்பை பெற்று நடித்து வந்தார் பிறகு திருமணம் ஆன பிறகு பெரிதாக நடிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் இருந்தார் பூமிகா.

பிரதர் பட அனுபவங்கள்:

actress bhoomika

actress bhoomika

இருந்தாலும் அவருக்கு ஒரு சில படங்களில் வாய்ப்புகள் கிடைத்துள்ளன இந்த நிலையில் தற்சமயம் தமிழில் பிரதர் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் பூமிகா. இதற்கு முன்பே தெலுங்கில் நானி நடித்த திரைப்படம் ஒன்றில் அவருக்கு அண்ணியாகவும் இவர் நடித்திருக்கிறார்.

இப்போது அந்த மாதிரியான கதாபாத்திரங்கள் தான் அவருக்கு கிடைத்து வருகின்றன. பிரதர் திரைப்படத்தில் நடிக்கும் போது ஜெயம் ரவியுடன் நடந்த சுவாரசியமான விஷயங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் பூமிகா. அதில் அவர் கூறும் பொழுது ஜெயம் ரவியை கோபப்பட்டு நான் பார்த்ததே கிடையாது.

ஒரு முறை கூட படப்பிடிப்பில் ஜெயம் ரவி கோபப்பட்டதே கிடையாது எப்போதுமே ஹேப்பியாக இருப்பார். மேலும் அவரும் வி.டி.வி கணேஷும் ஒன்று சேர்ந்து விட்டால் அவர்களை தடுக்கவே முடியாது. இருவரும் சேர்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள்.

மேலும் அவர்கள் இருவருக்குமே செஸ் விளையாட பிடிக்கும் இடைவெளி நேரங்களில் எல்லாம் செஸ் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதிலும் மிக மோசமாக இரவு ஒரு மணி வரைக்கும் எல்லாம் இவர்கள் இருவரும் செஸ் விளையாடுவதை பார்த்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் பூமிகா.

Articles

parle g
madampatty rangaraj
To Top