Cinema History
ட்ரெஸ் போடும்போது அந்த இடத்துல வாயை வச்சி கடிப்பாங்க!.. சினிமா அனுபவத்தை பகிர்ந்த நடிகை கஸ்தூரி!.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து இப்பொழுது ஒரு சர்ச்சையான அரசியல்வாதியாக மாறி இருப்பவர் நடிகை கஸ்தூரி. எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் 1992ல் தனது படிப்பை முடித்த கஸ்தூரி அதற்குப் பிறகு ஃபெமினா மிஸ் மெட்ராஸ் என்கிற விருது பெற்றார்.
அதன் மூலமாக அவருக்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் ஆரம்பத்தில் நடிக்கும் போது மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் எல்லாம் இல்லாமல் டீசண்டான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார் கஸ்தூரி.
முதல் பட வாய்ப்பு:
முதன்முதலில் ஆத்தா உன் கோயிலிலே என்கிற திரைப்படத்தில்தான் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதாநாயகனான நடிகர் செல்வாவிற்கும் அந்த படம்தான் முதல் திரைப்படமாக அமைந்தது.
அதற்கு பிறகு கஸ்தூரிக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. 1990 களில் இருந்த சினிமா ரசிகர்களுக்கு கஸ்தூரியை கண்டிப்பாக தெரிந்திருக்கும். அப்போது தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் கஸ்தூரி.

சமீபத்தில் கூட தமிழ் படம் 2, டிராபிக் ராமசாமி மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் கஸ்தூரி நடித்து வந்து கொண்டிருந்தார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மூலமாக அதிக பிரபலமாகி வந்தார் கஸ்தூரி.
இப்போது அவ்வப்போது ஒரு சில திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. மற்றபடி முழு மூச்சாக அரசியலில்தான் ஈடுபாடு காட்டி வருகிறார் கஸ்தூரி. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசும்பொழுது தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து இருந்தார்.
கஸ்தூரியின் அனுபவம்:
அதில் கூறும் பொழுது அந்த காலத்தில் எல்லாம் கேரவன் வசதி எல்லாம் கிடையாது. நடிகைகள் கிடைக்கும் இடத்தில் உடை மாற்றிக் கொண்டு வருவோம். அதேபோல எங்களுக்கான காஸ்ட்யும்களை எங்களுக்கு தகுந்தாற்போல தைப்பதற்கு நேரம் இருக்காது.
அதனால் உடையை எங்கள் மேலே போட்டு தைக்கும் வேலையை எல்லாம் செய்வார்கள். என்னை சுற்றி அதிகபட்சம் இருக்கும் உதவியாளர்கள் எல்லாம் ஆண்களாகதான் இருப்பார்கள். அப்பொழுது இந்த மாதிரி உடையை தைக்கும் பொழுது அதில் நூல் ஏதாவது பிசிராக இருந்தால் அதை வாயாலே கடித்து அகற்றுவார்கள்.
என் இடுப்புக்கு துணியை வைத்து தைக்கும் போது அதே மாதிரி நூல் பிசிராக இருந்ததால் அந்த இடத்தில் வாயை வைத்து கடித்தார் ஒரு நபர் ஆனால் அப்படி செய்யும் யாரும் அதை தவறான நோக்கத்தில் செய்வது கிடையாது தொழில் முறையாக மட்டுமே செய்வார்கள் என்று அது குறித்து விளக்கம் கொடுத்து இருக்கிறார் கஸ்தூரி.
