Cinema History
எம்.ஜி.ஆரால்தான் அந்த இளம் நடிகருடன் நடிக்க முடியலை.. சீக்ரெட்டை உடைத்த நடிகை லதா..!
தமிழ் சினிமாவில் அனைவராலும் போற்றப்படும் ஒரு நடிகராக ஒரு காலத்தில் இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர் அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி எம்.ஜி.ஆருக்கு நிகரான பிரபலமான இன்னொரு நபர் இல்லை என்று கூற வேண்டும்.
அந்த அளவிற்கு அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்து வந்தன. அதே சமயம் எம்.ஜி.ஆர் குறித்து தமிழ் சினிமாவிலும் மக்கள் மத்தியிலும் சில சர்ச்சைகள் உண்டு.
அதாவது எம்ஜிஆர் தொடர்ந்து நிறைய நடிகைகளுடன் தொடர்பில் இருந்தார் என்று ஒரு பேச்சு காலம் காலமாகவே இருந்து வருகிறது என்றாலும் அதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இப்போது வரை இருந்தது கிடையாது.
நடிகை லதா:
முக்கியமாக பிரபல நடிகைகளான மஞ்சுளா, லதா, ஜெயலலிதா போன்ற நடிகைகளுடன் அதிக தொடர்பில் இருந்தார் எம்.ஜி.ஆர் என்று கூறுகின்றனர் உண்மையில் எம்.ஜி.ஆர் அப்படிஎல்லாம் இருந்தாரா என்பது தெரியாத விஷயமாக இருக்கிறது.

இந்த நிலையில் நடிகை லதா ஒரு பேட்டியில் பேசும்பொழுது உண்மையிலேயே எம்.ஜி.ஆர் உங்களுக்கு எப்படிப்பட்டவர் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லதா என்றுமே எனது நன்மைக்காக தான் எம்.ஜி.ஆர் வேலை செய்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் அக்ரிமெண்ட்:
எம்.ஜி.ஆருடன் பணிபுரியும்பொழுதே சில வருடங்கள் அவருடன் மட்டும் நடிக்க வேண்டும் என்று எனக்கு அக்ரிமெண்ட் போட்டு இருந்தார். ஏனெனில் அவர் வளர்த்து விட்ட நிறைய நடிகைகள் வளர்ந்த பிறகு அவருடன் நடிக்கவில்லை.
அதனால் நானும் அப்படி சென்றுவிடக்கூடாது என்று அக்ரி மண்டை போட்டிருந்தார். அதனால் அப்பொழுது இளம் நடிகர்களாக இருந்த ஜெய்சங்கர் மாதிரியான நடிகர்களுடன் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று கூறி இருக்கிறார் லதா.
