தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் இருந்து வருகிறார் நடிகை நந்திதா ஸ்வேதா.
தமிழில் இவர் அட்டகத்தி திரைப்படம் மூலமாக அறிமுகமானாலும் கூட இவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் முண்டாசுப்பட்டி ஆகிய இரண்டு திரைப்படங்கள் தான்.
இந்த திரைப்படங்களுக்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. ஆனால் கதை தேர்ந்தெடுப்புகளில் தேர்ந்தெடுப்பதில் அவர் கொஞ்சம் கோட்டை விட்டுவிட்டார் என்று கூறலாம்.
அவர் தேர்ந்தெடுத்து நடித்த நிறைய திரைப்படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து வாய்ப்புகளும் குறைந்தது இருந்தாலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.












