News
மறுபடியும் மறுபடியும் கேரளாவை தப்பா பேசாதீங்க!.. ஹேமா கமிட்டி விவகாரத்தில் கடுப்பான நடிகை ஊர்வசி!..
தற்சமயம் மலையாள சினிமாவில் நடந்த பாலியல் தொந்தரவுகள் குறித்த விஷயங்கள்தான் தென்னிந்தியா முழுவதும் பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. மேலும் வட இந்தியாவில் இது குறித்த பேச்சுக்கள் ஆரம்பித்து இருக்கின்றன.
இந்த நிலையில் மலையாள பிரபலங்கள் பலரிடமும் இது குறித்து பேட்டிகளை எடுக்க துவங்கியிருக்கின்றனர். மேலும் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் கூட மலையாளத்தில் நடித்த பொழுது அவர்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்களை கூறத் தொடங்கி இருக்கின்றனர்.

நடிகை குஷ்பூ கூட அங்கு நடிக்க சென்ற பொழுது அவருக்கு நடந்த மோசமான அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் மலையாள சினிமாவில் மட்டும்தான் இவ்வளவு கொடுமைகள் நடக்கிறதா என்று ஒரு பக்கம் கேள்விகள் இருந்து வருகின்றன.
நடிகை ஊர்வசி கருத்து:
அதே சமயம் தமிழ் நடிகர்கள் யாருமே கூட இப்பொழுது வரை தமிழ் சினிமாவில் நடக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து பேசவில்லையே என்பதும் கேள்வியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகை ஊர்வசியிடம் இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று எடுக்கப்பட்டது.
ஏனெனில் ஊர்வசி தமிழ் மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் நடித்த நடிகை ஆவார். இந்த நிலையில் கேரள சினிமா என்பது இப்போது அதிக வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது. தமிழ் மக்கள் கூட கேரளா அளவிற்கு தமிழில் படம் வருவதில்லையே என்று நினைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மலையாள சினிமாவின் மறுமுகம் இவ்வளவு கேவலமாக இருக்கிறது என்று பத்திரிகையாளர் நடிகை ஊர்வசியிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த ஊர்வசி மீண்டும் ஒருமுறை கேரளா சினிமாவை கேவலம் என்றெல்லாம் கூறாதீர்கள், மற்ற சினிமாவிலும் இந்த மாதிரியான அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் இருக்கின்றன.
ஆனால் அதை கூறுவதற்கு எந்த நடிகைக்கும் துணிவு வரவில்லை. கேரளா நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் அதில் துணிச்சலை பெற்று இருக்கின்றனர். அவர்களுக்கு நடந்த இந்த பிரச்சனைகள் வேறு யாருக்கும் நடக்க கூடாது என்று அரசிடமே இது குறித்து பேசி ஒரு கமிட்டியை அமைத்திருக்கின்றனர் .
அதனால் இந்த விஷயங்கள் எல்லாம் வெளிவந்து இருக்கிறது மற்றபடி கேரளா சினிமா மட்டும் தான் இப்படி மோசமாக இருக்கிறது என்பது சரி கிடையாது என்று கூறியிருக்கிறார் ஊர்வசி.
