Connect with us

பையா 2வில் நான்தான் ஹீரோயின்! – பாலிவுட் பிரபலத்தை தூக்கிவிட்டு உள்ளே நுழைந்த பூஜா ஹெக்தே!

News

பையா 2வில் நான்தான் ஹீரோயின்! – பாலிவுட் பிரபலத்தை தூக்கிவிட்டு உள்ளே நுழைந்த பூஜா ஹெக்தே!

Social Media Bar

 தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வந்த முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்தே.  ஆனால் அந்த படத்திற்குப் பிறகு அவருக்கு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  தற்சமயம் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

2010 ஆம் ஆண்டு வெளிவந்து  பெரும் ஹிட் கொடுத்த பையா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு இயக்குனர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் நடிகர் ஆர்யாவை கதாநாயகனாக நடிக்க வைக்கலாம் என பேச்சு வார்த்தைகள் சென்று கொண்டுள்ளன.

 இதனை அடுத்து படத்தின் கதாநாயகியாக யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து பலவகையான குழப்பங்கள் நிலவி வந்தன.  பாலிவுட்டில் பிரபலமாக உள்ள  நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரை  இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என திட்டமிடப்பட்டது.

 ஆனால் ஏற்கனவே ஜான்விகபூர் பாலிவுட்டில் பல படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பதால் வேறு  யாரை நடிக்க வைப்பது என்பது குறித்த பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தன. இந்த நிலையில் தற்சமயம் பூஜா ஹெக்தேவை இந்த படத்தில்  ஆர்யாவிற்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து தற்சமயம் பூஜா ஹெக்தேவிடம்  பேசி வருகின்றனர். இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வரவில்லை.

To Top