Connect with us

குழந்தை பெத்த உடம்பா இது.. பாடி ஸ்ட்ரெக்ச்சரை அப்படியே மெயிண்டைன் செய்யும் சாயிஷா.. வைரல் வீடியோ

sayeesha

Actress

குழந்தை பெத்த உடம்பா இது.. பாடி ஸ்ட்ரெக்ச்சரை அப்படியே மெயிண்டைன் செய்யும் சாயிஷா.. வைரல் வீடியோ

Social Media Bar

Actress Sayyeshaa: சில நடிகைகள் பல மொழி படங்களிலும் நடித்து பிரபலமாக இருப்பார்கள். தமிழில் குறிப்பிட்டு சொல்லும் படியாக ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும், அந்த படங்கள் வெற்றியடைந்த நிலையில் ரசிகர்களின் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

ஒரு சில நடிகைகள் இரண்டு, மூன்று படங்கள் மட்டும் நடித்திருந்தாலும் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை விட்டு விடுவார்கள். திருமணத்திற்குப் பிறகு ஒரு சில நடிகைகளுக்கு மார்க்கெட் இல்லாமல் சென்று விடுவதால் அவர்கள் சினிமாவை விட்டு விலகி இருப்பார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட படங்கள் மட்டும் நடித்து ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்திருப்பவர் சாயிஷா.

இவருக்கு திருமணமான நிலையில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஆனால் தற்பொழுதும் பார்ப்பதற்கு உடற்கட்டுடன் இருக்கும் சாயிஷா, அவர் நடனமாடிய வீடியோ ஒன்றை இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார். தற்போது அவரின் வீடியோ ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

நடிகை சாயிஷா

நடிகை சாயிஷா தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இவர் அஜய் தேவ்கன் சிவாய என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார். பிறகு தெலுங்கில் அகில் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

sayesha-saigal

இவர் தமிழில் வனமகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இவர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

sayesha-saigal

யாரும் எதிர்பாராத நேரத்தில் சாயிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கும் ஆர்யாவிற்கும் திருமணம் நடக்க இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் சாயிஷா

நடிகர் ஆர்யாவை திருமணம் செய்த பிறகு குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் நடித்து வரும் சாயிஷா நடனத்தில் ஆர்வம் உடையவர் ஆவார். முறையான நடனத்தை பயின்ற சாய்ஷா திருமணத்திற்கு பிறகு சில படங்களில் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து இருக்கிறார்.

இவருக்கும் ஆர்யாவுக்கும் திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் சாயிஷா தற்போதும் உடற்கட்டுடன் இருக்கிறார். மேலும் படங்களிலும் ஹீரோயினாக நடித்து வரும் சாயிஷா தான் நடனமாடியுள்ள வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

sayesha-saigal

இதைப் பார்த்த சாய்ஷாவின் ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகும் சாயிஷா இப்படி எவ்வாறு இருக்கிறார் என்றும், குழந்தை பிறந்த பிறகும் சாயிஷா உடற்கட்டுடன் இருக்கிறார் என அவர் ரசிகர்கள் அவரின் வீடியோவை லைக் செய்தும் ஷேர் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர் தமிழில் கார்த்தியுடன் கடை குட்டி சிங்கம் மற்றும் விஜய் சேதுவுடன் ஜூங்கா, சூர்யாவுடன் காப்பான் ஆகிய திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

To Top