Connect with us

21 வயதில்.. நிச்சயதார்த்தம் முடிஞ்சதுமே அந்த முடிவை எடுத்துட்டேன்… நடிகை சிவரஞ்சனி எடுத்த அதிர்ச்சி முடிவு..

sivaranjani

Latest News

21 வயதில்.. நிச்சயதார்த்தம் முடிஞ்சதுமே அந்த முடிவை எடுத்துட்டேன்… நடிகை சிவரஞ்சனி எடுத்த அதிர்ச்சி முடிவு..

Social Media Bar

Actress Sivaranjani was one of the most popular actresses in Tamil cinema. she is currently without much opportunities in cinema. she also told the reason for that in the interview

திரையுலகம் என்பது எப்பொழுதுமே நடிகர்களுக்கு எளிதாக இருக்கும் அளவிற்கு நடிகைகளுக்கு இருப்பது கிடையாது. பெரும்பாலும் நடிகைகள் சினிமாவில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு நிறைய போராட வேண்டி இருக்கிறது.

அதே மாதிரி சினிமாவில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு கடினமான விஷயமாக இருக்கிறது. தொடர்ந்து குடும்பம் சார்ந்து அவர்களுக்கு வரும் பிரச்சனை அது இல்லாமல் சினிமாவில் வரும் பிரச்சனை என்று அனைத்து பிரச்சனைகளையும் தொடர்ந்து அவர்கள் சந்தித்து வரும் நிலையில் தான் சினிமாவிலும் அவர்கள் வளர வேண்டி இருக்கிறது.

நடிகைகளுக்கு இருக்கும் பிரச்சனைகள்

பெரும்பாலும் ஆண்களுக்கு இவ்வளவு பிரச்சனைகள் இருப்பது கிடையாது முக்கியமாக எப்பொழுதும் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் தொடர்ந்து அவர்கள் நடிப்பது என்பது பிரச்சனையாக இருக்கிறது.

அவர்களின் சொந்த வாழ்க்கையை அது பாதிக்கிறது. இதனால் நிறைய நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை விட்டு விடுகின்றனர் அப்படியாக ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை சிவரஞ்சனி.

sivaranjani family

sivaranjani family

ஆனால் இவர் கூட திருமணத்திற்கு பிறகு நடிப்பதை விட்டு விட்டார். நடிகை சிவரஞ்சனி நடிப்பை விட்டு விலகிய பொழுது அவர் தமிழில் பிரபலமான நடிகையாக இருந்தார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் வந்து கொண்டே இருந்தன.

விலகிய நடிகை சிவரஞ்சினி:

இருந்தாலும் கூட அவர் அந்த வாய்ப்பை விட்டுவிட்டார். எல்லா நடிகைகளுக்கும் இப்படியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றாலும் கூட அதை அவர் விட்டு மிக எளிதாகவே விலகிவிட்டார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் விவரித்த அவர் கூறும் பொழுது எனக்கு 21 வயதில் திருமணம் ஆனது.

எனக்கு நிச்சயதார்த்தம் ஆனபொழுது எனது கணவர் சினிமாவில் நடிக்க கூடாது என்று கூறினார். எனக்கும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் பெரிதாக ஈடுபாடு இல்லை. எனவே நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன். மேலும் எனது கணவரும் ஒரு நடிகர் என்பதால் ஒரே தொழிலுக்குள் இருவரும் இருக்க வேண்டாம் என்று கருதினார் எனக்கும் அது சரி என்று பட்டது. எனவே நான் சினிமாவில் இருந்து விலகினேன் என்று அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் நடிகை சிவரஞ்சனி.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top